தமிழ்த் தேசிய பாடலை பாடிய ஏ.ஆர்.ரஹ்மான்!

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து பாடியிருக்கும் மூப்பில்லா தமிழே தாயே பாடலில் தமிழ்த் தேசியம் இருப்பதாக கவிஞர் தாமரை தெரிவித்துள்ளார்.

தாமரை தனது ஃபேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது, “ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துப் பாடியிருக்கும் மூப்பில்லா தமிழே தாயே என்கிற தனிப்பாடல் விரைவில் வெளியாக இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

ஓரிரு மாதங்களுக்கு முன் ரகுமான் திடீரென்று அழைத்தார் என்றும், தமிழர்கள் சோர்ந்திருக்கும் இவ்வேளையில் உலகத் தமிழர்களை இணைக்கும், உற்சாகமூட்டும் வண்ணம் ஒரு சிறப்பான தமிழுக்கான பாடல் உருவாக்கும் எண்ணம் உள்ளதாக அவர் தெரிவித்ததாக கூறினார். அவர் சொன்னப்படி எழுதிய பாடல் விரைவில் வெளியாக இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

புயல் தாண்டியே விடியல் என்று தொடங்கும் பாடலுக்கான தலைப்பாக மூப்பில்லா தமிழே தாயே என்பதைத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இறுதி வடிவத்தில் நானும் இன்னும் கேட்கவில்லையாதலால் நானும் ஆவலோடு காத்திருக்கிறேன் என தெரிவித்துள்ளார். மேலும், பாடல் வெளியாகும்போது அது தொடர்பான செய்திகளைப் பகிர்கிறேன் என தெரிவித்துள்ளார்.

தமிழ்த்தேசியத்தில் கள அனுபவமும் எனக்கு உண்டு என்பதால் பல செய்திகளைப் பகிர்ந்தேன் என்றும், அதை ஒட்டியே வரிகளையும் எழுதினேன் என்றும் கூறியுள்ளார். பற்பல இரவுகளை அவரின் ஒலிக்கூடத்திலேயே கழித்தேன் என்றும், இன்றைய சூழலில் தமிழர்களை இசையால் இணைக்கும் கருப்பாடல் உருவானது எனவும் பாடலாசிரியர் தாமரை தனது பதிவில் தெரிவித்துள்ளார்.


எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds