முகத்தில் வீக்கம் கண்ணில் கொப்பளம் – ரைஸா வில்சனுக்கு ஏற்பட்ட விபரீதம்!

நடிகை ரைஸா வில்சன் தோல் மருத்துவர் ஒருவரின் தவறான சிகிச்சையால் தனது முகம் வீங்கிவிட்டதாக, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குற்றம் சாட்டியுள்ளார். அவரது இந்த புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் ரைசவா இது என வருத்ததில் ஆழ்ந்துள்ளனர்.

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ரைசா வில்சன். தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி 2 படத்தின் மூலம் அறிமுகமானார் ரைசா. தொடர்ந்து யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் வெளியான பியார் பிரேமா காதல் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர்.

தனுஷூ ராசி நேயர்களே, வர்மா உள்ளிட்ட திரைப்படங்களிலும் அவர் நடித்திருந்தார். இந்நிலையில் தோல் மருத்துவர் ஒருவரின் தவறான சிகிச்சையால் ரைசா வில்சனின் முகமே மாறியுள்ளது. இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “ நான் நேற்று தோல் மருத்துவர் டாக்டர் பைரவியை சிறிய முக சிகிச்சைக்காக சந்தித்தேன். ஆனால் அவர் எனக்கு தேவையில்லாத சிகிச்சையை வலுக் கட்டாயாமாக அளித்தார்.

அதனால் தற்போது எனது முகம் இப்படி மாறியிருக்கிறது. இதுதொடர்பாக அவரை நான் சந்திக்க முயன்றேன். ஆனால் அவர் என்னை பார்க்க மறுத்துவிட்டார். அவரது உதவியாளர்கள் அவர் சென்னையில் இல்லை என்று கூறிவிட்டனர்என்று அவர் தனது வேதனையை தெரிவித்துள்ளார். மேலும் அந்த மருத்துவர் மீது புகார் அளித்துள்ளார். அத்துடன் அவர் வீங்கிய முகப் புகைப்படத்தையும் அந்தப்பதிவில் இணைத்துள்ளார்.

அதில் ரைசாவின் இடது பக்க கன்னம் வீங்கியிருக்கிறது. குறிப்பாக கண் அருகில் கொப்பளம் போல் வீக்கம் ஏற்பட்டுள்ளது. சினிமாவிற்கு, குறிப்பாக பெண் நாயகிகளுக்கு படத்தில் நடிக்க முகம், அழகு தான் முக்கியம். ஆனால் ரைசாவின் இந்த நிலையை பலரையும் வருத்தமடையச்செய்துள்ளது. காதலிக்க யாருமில்லை, எப்.ஐ.ஆர் உள்ளிட்ட நான்கிற்கும் மேற்பட்ட படங்களில் ரைசா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?