விஜய் படத்தில் இணைந்த நேரம்... பூஜா ஹெக்டேவுக்கு அடித்த அடுத்த லக்!

by Sasitharan, Apr 19, 2021, 22:10 PM IST

விஜய் அடுத்து தனது 65வது படத்தில் நடிக்க தயாராகி விட்டார். இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். இதற்காக படக்குழு ஜார்ஜியா பறந்துள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க பூஜா ஹெக்டே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பூஜா ஹெக்டே ஏற்கனவே தமிழில் ஜீவா ஜோடியாக முகமூடி என்ற படத்தில் நடித்தவர்.

தெலுங்கில் அல்லு அர்ஜூனுடன் இணைந்து அல வைகுந்த புரமலோ படத்தில் நடித்தார். அதில் அவருடன் இணைந்து புட்ட பொம்மா.. பாடலுக்கு அசத்தல் நடனம் ஆடி பிரபலமானார். அடுத்த பிரபாஸ் உடன் ராதே ஷயாம் படத்தில் நடித்தார். அதன் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. 2012ம் ஆண்டு முகமூடி படத்தில் தமிழில் நடித்த பூஜா ஹெக்டே 9 வருடத்துக்குப் பிறகு மீண்டும் தமிழில் நடித்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் அவரின் இரண்டாவது இன்னிங்ஸ் வெற்றிகரமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப விஜய் படத்தில் ஒப்பந்தமான கையோடு தற்போது சூர்யா படத்தில் ஒப்பந்தம் ஆக இருக்கிறாராம் பூஜா ஹெக்டே.

சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் கேமியோ ரோலில் நடித்து வருகிறார். இதையடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்க இருக்கிறார். அதனைத் தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார். அண்ணாத்த படத்தை முடித்த பின் இப்படம் ஆரம்பமாகின்ற இந்தப் படத்தில் தான் பூஜா ஹெக்டே ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

You'r reading விஜய் படத்தில் இணைந்த நேரம்... பூஜா ஹெக்டேவுக்கு அடித்த அடுத்த லக்! Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை