பொம்மை முதல் ஆண் தேவதை வரை - இயக்குநர் தாமிராவின் வாழ்க்கை பயணம்!

கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த ரெட்டச்சுழி, ஆண் தேவதை திரைப்படங்களின் இயக்குநரும், ஆகச்சிறந்த எழுத்தாளருமான தாமிரா காலமானார். அவரது திரையுலக பயணம் குறித்து பார்ப்போம்.

“இந்த உலகை வெல்ல அன்பைத் தவிர வேறு சூட்சமம் இல்லை
என்னுள் இருக்கும் தீராக் கோபங்களை இன்றோடு விட்டொழிக்கிறேன்.
இனி யாரோடும் பகைமுரண் இல்லை; யாவரும் கேளீர்” என்ற தனது இறுதி முகநூல் பதிவிலும் கூட மாசற்ற மானுட அன்பை விதைத்துவிட்டுச் சென்றுள்ளார் இயக்குநர் தாமிரா.

நெல்லை மாவட்டம் துலுக்கர்ப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தாமிரா என்ற சேக் தாவூத், இதழியலில் முதுகலை பட்டம் பெற்றவர். சினிமா கனவுகளோடு சென்னையில் கால் பதித்த அவர், பொம்மை உள்ளிட்ட பல சினிமா இதழ்களிலும் கட்டுரைகளை எழுதிவந்தார். தாமிரபரணி ஆற்றின் பெயரிலிருந்து தாமிரா என்பதை தனது புனைப் பெயராக்கிக்கொண்டு, பல சிறுகதைகளையும் அவர் எழுதத் துவங்கினார். அவரது பர்வதமலையில் ராஜகுமாரி, தொடர்பு எல்லைக்கு அப்பால் கடவுள் ஆகிய சிறுகதைத் தொகுப்புகள் அனைவராலும் கவனம் ஈர்க்கப்பட்டன.

இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தரிடம் இணை இயக்குநராக பணியாற்றிய தாமிரா, பாலச்சந்தர் கடைசியாக இயக்கிய பொய் படத்திற்கு வசனம் எழுதியிருந்தார். மேலும், “சஹானா, அண்ணி, மனைவி” உள்ளிட்ட தொலைக்காட்சித் தொடர்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார் தாமிரா. தமிழ் படங்கள் தவிர கன்னடத்தில் வெளியான “அமிர்த்தாரோ, மாத்தாடு மாத்தாடு மல்லிகே” ஆகிய படங்களுக்கும் திரைக்கதை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில் 2010ஆம் ஆண்டு வெளியான “ரெட்டச்சுழி” திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அவதாரமெடுத்த தாமிரா, முதல் படத்திலேயே பிரபல இயக்குநர்களான பாலசந்தர், பாரதிராஜா ஆகியோரை நடிக்க வைத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இறுதியாக சமுத்திரகனி, ரம்யா பாண்டியன் நடிப்பில் ஆண் தேவைதை என்ற படம் அவர் இயக்கத்தில் வெளியானது. தாமிராவின் மிக முக்கியமான படைப்பாக மெஹர் என்ற தொலைக்காட்சிப் படம் காணப்படுகிறது. பிரபஞ்சன் எழுதிய பாயம்மா சிறுகதையை தழுவி எடுக்கப்பட்ட மெஹர், வரதட்சணையால் பொருளாதாரத்தில் பின்தங்கிய முஸ்லிம் குடும்பத்தில் நிலவும் சிக்கல்களை, வலிகள் நிறைந்த காட்சிகள் வழியே எடுத்துரைத்தது.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?