சினிமா தொடர்- `கண்டதும்… கேட்டதும்… – பகுதி 2

சினிமா தொடர் - 'கண்டதும்...கேட்டதும்...பகுதி-1'

உலக சினிமா என்று இன்றளவில் நாம் பேசத் தொடங்கினால், ஈரானிய சினிமாவிலோ, கொரிய சினிமாவிலோ அல்லது ஜப்பானிய சினிமாவிலோ போய் நிற்பவர்கள்தான் அதிகம்.

ஆனால், உலக சினிமா என்பதற்கான வரையறை என்பது என்ன? இந்திய மொழிகள், ஆங்கில மொழி அல்லாது வேறு எந்த மொழியில் படம் வெளிவந்தாலும் அது உலக சினிமா ஆகிவிடுமா..? கண்டிப்பாகக் கிடையாது.

உலக சினிமா என்பதற்கு அடுத்து வருவோம். முதலில் நல்ல சினிமா என்பதற்கான வரையறை என்ன? `ஒரு சினிமாவை நம்மால் நம்ப முடிந்தால் அது நல்ல சினிமா. நம்பா முடியாவிட்டால் கெட்ட சினிமா’ என்று ஈரானிய திரைப்பட மேதை அப்பாஸ் கிரியோஸ்தமி சொன்ன வார்த்தைகள் நல்ல சினிமா என்ன என்பதற்கான சிறிய புரிதலை உண்டாக்கும்.

அப்படியென்றால் உலக சினிமா என்பது..? எந்த மொழித் திரைப்படமாக இருந்தாலும், அதில் நம் உணர்வுகளை ஏதோ ஒரு விதத்தில் பிரதிபலித்து, அந்த படைப்போடு ஒன்றிணைய முடிந்தால் அது உலக சினிமா வரையறைக்குள் வரலாம். ஆனால், உலக சினிமாவுக்கு எந்தவொரு எல்லையும் கிடையாது. காரணம், ஒவ்வொரு ஆண்டும் சினிமா எடுப்பதற்கான தொழில்நுட்பம் எளிய மக்களின் கைகளில் வந்துகொண்டிருக்கின்றன. சொல்லப்படாதவர்கள் கதைகளும், கேட்க மறுக்கப்பட்டவர்கள் புராணங்களும் வெள்ளித்திரைக்கு வந்து கொண்டிருக்கின்றன. இதனால், `எது நல்ல சினிமா?’ என்பதற்கான விளக்கம் மாறிக் கொண்டே இருக்கிறது.

ஆனால், படத்தின் பேசு பொருள் எதுவாக இருந்தாலும் `திரைமொழி’ என்று சொல்லப்படும் `ஃபிலிம் லாங்குவேஜ்’ கச்சிதமாக இருந்தால்தான் அது அனைத்துத் தரப்பு மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்படும். இந்தத் திரைமொழிதான் நல்ல படைப்புக்கும் மோசமான படைப்புக்கும் பெரிய வித்தியாசத்தை உருவாக்கிவிடுகிறது.

அப்படி கச்சிதமான திரைமொழி கொண்ட படங்களின் வரிசையில் முன்னணியில் நிற்பது `தி ஷஷாங்க் ரிடம்ப்ஷன்’ (The Shawshank Redemption). 1994-ம் ஆண்டு வெளிவந்த இந்த ஹாலிவுட் திரைப்படம் அன்றைய காலக்கட்டத்தில் தோல்வியடைந்தது. ஆனால், நம்மூரில் சில ஹிட்டான லேட்-பிக்கப் படங்கள் போல, தியேட்டரை விட்டு வெளியேறியதும் இத்திரைப்படம் குறித்து நிறைய பேர் பேசத் தொடங்கினர்.

குறிப்பாக, ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் இருக்கும் தொலைக்காட்சிகளில் அதிக நேரம் ஒளிபரப்பப்படும் திரைப்படங்களில் இப்படம் முன்னணியில் உள்ளது. இந்தச் சாதனையை இன்றளவும் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது 'தி ஷஷாங்க் ரிடம்ப்ஷன்'. அப்படி கால் நூற்றாண்டு காலமாக அமெரிக்காவிலும் உலகம் முழுவதிலும் கொண்டாடப்பட்டு வரும் திரைக்காவியம்தான் 'தி ஷஷாங்க் ரிடம்ப்ஷன்'.

படத்தின் நாயகன் ஆண்டி டுஃப்ரீன், செய்யப்படாத குற்றத்திற்காக சிறைக்கு அனுப்பப்படுகிறான். அங்கே அவருக்கு எல்லீஸ் பாய்ட் ரெட்டிங் என்கிற `ரெட்’-ன் நட்பு கிடைக்கிறது. ரெட் பல பத்தாண்டுகளாக சிறையில் இருப்பவன். சிறையில் இருக்கும் கைதிகளுக்கு வெளியில் இருந்து பொருள் தேவைப்பட்டால் அதை கமிஷன் பெற்றுக் கொண்டு வாங்கித் தருபவன். சிறையில் இருக்கும் அனைத்து காவலர்கள் உடனும் ரெட்டுக்கு நல்லப் பழக்கம். இதற்காகவே அவனுடன் நெருங்கிப் பழகி ஆரம்பித்து, ஒரு கட்டத்தில் அவனின் நிழல் போலவே மாறுகிறான் ஆண்டி.

ஒரு கட்டத்தில் ஆண்டிக்கு, தான் செய்யாத குற்றத்தை நிரூபிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால், அவன் அதிகம் நம்பும் நபர் ஒருவராலேயே அந்த வாய்ப்பு பொசுக்கப்படுகிறது. இதனால், மனமுடைகிறான் ஆண்டி. அதேநேரத்தில், நம் வாழ்க்கை நம் கையில் என்பதை முடிவு செய்து சிறையிலிருந்து பக்கா பிளான் போட்டுத் தப்பிக்கிறான். தப்பிப்பதற்கு முன்னர், உயிர் நண்பனான ரெட்டுக்கு தான் எங்கு இருப்பேன் என்பது குறித்தும் சிறிய க்ளூ கொடுக்கிறான்.

ஆண்டி தப்பித்த சில ஆண்டுகள் கழித்து ரெட்டுக்கு சிறைத் தண்டனை காலம் முடிகிறது. இதையடுத்து, ஆண்டி கொடுத்த க்ளூவை கண்டடைந்து நண்பர்கள் இருவரும் மீண்டும் ஒன்றிணைகிறார்களா என்பது படு கச்சிதமான திரைநேர்த்தி கொண்ட படத்தின் மீதிக் கதை.

2 மணி நேரம் 22 நிமிஷம் நீளும் இந்தப் படத்தின் எந்தவொரு காட்சியையும் தேவையில்லாதது என்று ஒதுக்க முடியாது. சீனுக்கு சீனுக்கு அவ்வளவு செய் நேர்த்தி இருக்கும். இந்தப் படத்தில் ரெட்டாக நடித்த மோர்கன் ஃப்ரீமேன்தான் பிற்காலத்தில் ஹாலிவுட்டின் மிகச் சிறந்த குணச்சித்திர நடிகராக உருவெடுக்கிறார். இந்தப் படத்தில் `வாய்ஸ் ஓவரில்’ வரும் அவரது குரலுக்காகவே எத்தனை முறை வேண்டுமானாலும் 'தி ஷஷாங்க் ரிடம்ப்ஷன்'-ஐப் பார்க்கலாம். இந்தத் திரைப்படத்தின் இயக்குநர் ஃப்ராங்க் டேராபான்ட்டின் முதல் திரைப்படம் இது. ஆனால், அவரின் மேதமையை அறிய இந்த ஒரு படமே போதும்.

இந்தத் திரைப்படத்தின் சிறப்பு என்னவென்றால், இன்றளவும் தொலைக்காட்சிகளில் போடப்படுதாலும், டிவிடிக்கள் விற்பதாலும் பல கோடி ரூபாயை தினம் தினம் சம்பாரித்துக் கொட்டுகிறது. ஒரு நல்ல திரைப்படம் தோற்காது என்பதற்கான உதாரணமாக திகழ்ந்து, உலக சினிமாக்களுக்கு இன்றளவும் நம்பிக்கை ஒளிக்கீற்றை பாய்ச்சிக் கொண்டிருக்கிறது 'தி ஷஷாங்க் ரிடம்ப்ஷன்'. இதுவரை இந்தப் படத்தைப் பார்க்கவில்லை என்றால் உடனடியாக பார்த்து அதன் மேஜிக்கை உணருங்கள் சினிமா ரசிகர்களே.

பி.கு: IMDB என்பது உலக அளவில் சினிமா ரசிகர்களுக்குக் கிடைத்த இணையதள பொக்கிஷம். இந்தத் தளத்தில், இதுவரை வெளிவந்த திரைப்படங்களின் பட்டியலில் பல ஆண்டுகளாக முதலிடத்தில் இருப்பது 'தி ஷஷாங்க் ரிடம்ப்ஷன்' தான்.

- பரத்ராஜ்

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :