ஜூன் 18 முதல் மீண்டும் வருகிறது பிக் பாஸ்..!

May 5, 2018, 21:39 PM IST

விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பாக பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் பாகம் தமிழ் ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்துடன் பார்க்கப்பட்டது.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சியில் ஆரவ், ஓவியா, காயத்ரி ரகுராம், சக்தி வாசு, வையாபுரி, சினேகன், கணேஷ் வெங்கட்ராம், ஜூலி உள்பட 19 பேர் போட்டியாளர்களாக கலந்துக் கொண்டனர். 100 நாட்கள் வெளி தொடர்பே இல்லாமல் நிகழ்ச்சியில் வழங்கும் டாஸ்க்குகளை செய்துக் காட்ட வேண்டும்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இறுதியாக ஆரவ் வெற்றிப்பெற்றார். தொடர்ந்து, சினேகன் மற்றும் கணேஷ் வெங்கட்ராம் அடுத்தடுத்த இடங்களை பிடித்தனர்.
தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம் வரும் ஜூன் 18ம் தேதி முதல் ஒளிபரப்ப இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிகழ்ச்சிக்கான ப்ரோமோ ஜூன் 3ம் தேதி வெளியாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.
பிக் பாஸின் இரண்டாம் பாகத்தில் பங்கேற்கபோகும் நட்சத்திரங்கள் யார் என்பது குறித்து இப்போதைக்கு சர்ப்ரைசாக வைத்துள்ளனர் பிக் பாஸ் குழுவினர்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading ஜூன் 18 முதல் மீண்டும் வருகிறது பிக் பாஸ்..! Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை