ரஜினி ரசிகர்களுக்கு நாளை சர்ப்ரைஸ்!

ரஜினியின் `காலா’ திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படக்குழு நாளை அவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கப் போகிறது.

இயக்குநர் பா.இரஞ்சித்- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட்டணியில் வந்த `கபாலி’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதையடுத்து மீண்டும் இரஞ்சித், ரஜினியை வைத்து படம் இயக்க உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டு வந்தது.

அதை உறுதிபடுத்தும் பட்சத்தில் நடிகர் தனுஷின் `உண்டர்பார் ஃபிலிம்ஸ்’ தயாரிப்பில் ரஜினி- இரஞ்சித் கூட்டணியில் படம் உருவாகப் போகிறது என்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. தொடர்ந்து மின்னல் வேகத்தில் நடந்த ஷூட்டிங்கால், `காலா’ தற்போது போஸ்ட் புரொடக்ஷனில் இருக்கிறது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் ஸ்டிரைக் காரணமாக தள்ளிப் போய்க்கொண்டிருந்தது `காலா’-வின் ரிலீஸ். இதையடுத்து, ஏப்ரல் 20-ம் தேதி, `காலா ஜூன் 7-ம் தேதி அனைத்து மொழிகளிலும் உலகெங்கிலும் வெளியாகும்’ என்று அறிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, `மே 9-ம் தேதி காலா திரைப்படத்தின் இசை வெளியிடப்படும்’ என்று படக்குழு சார்பில் கூறப்பட்டது. இந்நிலையில், நாளை மதியம் 3 மணிக்கு, `காலா’ திரைப்பட ஆல்பம் ப்ரிவியூ வெளியிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இது ரஜினி ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 - thesubeditor.com

 

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds