ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யாவின் மகனுக்கு நேற்று அவரது இல்லத்தில் கொண்டாடப்பட்டது. பிறந்த நாள் விழாவின் புகைப்படங்கள் தற்போது இணையங்களின் வைரலாகி வருகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் இளைய மகள் சௌந்தர்யா. இவருக்கும் தொழிலதிபர் அஷ்வின் ராம்குமாருக்கும் கடந்த 2010ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு, 2015ம் ஆண்டு மே மாதம் 6ம் தேதி வேத் என்ற மகன் பிறந்தார். இதன்பின்னர், கடந்த 2017ம் ஆண்டு சௌந்தர்யா&அஸ்வின் தம்பதிகள் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
இந்நிலையில் வேத்தின் பிறந்தநாள் விழா நேற்று ரஜினியின் வீட்டில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ், உள்பட குடும்பத்தினர் கலந்துக் கொண்டனர்.
பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் இணையத்தளங்களில் வைரலாகி வருகிறது.