டிராபிக் ராமசாமி- திரைப்பட டீசரை வெளியிடுகிறார் சகாயம் ஐஏஎஸ்!

by Rahini A, May 7, 2018, 20:27 PM IST

`டிராஃபிக் ராமசாமி’ என்ற திரைப்படத்தின் டீசரை சகாயம் ஐ.ஏ.எஸ் வெளியிட உள்ளார்.

சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து ‘டிராஃபிக் ராமசாமி’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. அறிமுக இயக்குநர் விக்கி இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

இதில், டிராஃபிக் ராமசாமியாக இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் நடிக்கிறார். அவருடைய மனைவியாக ரோகிணி நடிக்கிறார். படம் குறித்து எக்கச்சக்க எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், இதன் டீசர் விரைவில் வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்தது.

இந்நிலையில், சகாயம் ஐ.ஏ.எஸ் `டிராஃபிக் ராமசாமி’ படத்தின் டீசரை வெளியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் மே 8-ம் தேதி, மாலை 6 மணிக்கு இந்தப் படத்தின் டீசர் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. சகாயம் ஐ.ஏ.எஸ் ஒரு திரைப்படத்துக்கான டீசரை வெளியிடுவது இதுவே முதல் முறை என்பது குறிப்படத்தக்கது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading டிராபிக் ராமசாமி- திரைப்பட டீசரை வெளியிடுகிறார் சகாயம் ஐஏஎஸ்! Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை