சிவகார்த்திகேயன் படத்தில் மீண்டும் இணைந்தார் லேடி சூப்பர் ஸ்டார்

by Rekha, May 9, 2018, 11:30 AM IST
Share Tweet Whatsapp

சிவகார்த்திகேயன் தற்போது பொன்ராம் இயக்கத்தில் ‘சீமராஜா’ படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து, ரவிக்குமார் மற்றும் ராஜேஷ் இருவர் இயக்கத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார்.

ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில் ஸ்டூடியோ கீரின் சார்பில் கே.வி.ஞானவேல் ராஜா தயாரிக்க இருக்கிறார். இந்த படத்தின் முதற்கட்ட பூஜையும் நடந்துள்ளது.

இப்படத்தின் நாயகியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க இருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. ஏற்கெனவே சிவகார்த்திகேயனுக்கு நாயகியாக‘வேலைக்காரன்’ படத்திலும் நயன்தாரா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயன் சீமராஜா படத்திலும், நயன்தாரா விஸ்வாசம் படத்திலும் பிசியாக இருக்கின்றனர். இதற்கிடையில் சிவகார்த்திகேயனுடன் நடிக்கும் நடிகர்கள் தேர்வு மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இவை அனைத்தும் இறுதியானவுடன் படப்பிடிப்பு வருகிற ஜூன் மாதத்தில் துவங்க இருப்பதாக படக்குழு தெரிவித்தது.

 - thesubeditor.com


Leave a reply