இவள் தான் என் ரியல் கேப்டன்..- மனைவி மேல் உருகும் விராட்

by Rahini A, May 22, 2018, 15:15 PM IST
’என்றும் என் வாழ்க்கையின் கேப்டனாக இருப்பவள் என் மனைவி அனுஷ்கா” என உருகியுள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி.
‘இதுவல்லவோ காதல்’ என ஊரே வியக்கும் வகையில் தாங்கள் சார்ந்த துறையிலும் சரி, தங்களது சொந்த வாழ்க்கையிலும் சரி, யாரும் யாரையும் விட்டுக்கொடுக்காது சாதனை மேல் சாதனை படைத்து ஜொலித்து வருகின்றனர் இந்தத் தம்பதியினர்.
விராட் கோலியின் சாதனையை மனைவி அனுஷ்கா சமூக வலைதளங்களில் கொண்டாடி மகிழ்வதும் அனுஷ்காவின் சாதனையையும் அவரது பெருமையையும் கோலி சமூக வலைதளங்களில் பகிர்ந்து மகிழ்வதும் தொடர் கதையாகி வருகிறது.
இந்நிலையில், சமீபத்திய பேட்டியில், `என் மனைவி அனுஷ்கா ஷர்மா தான் எங்களது வீட்டின் கேப்டன். எனது வாழ்க்கையின் முக்கிய முடிவுகள் அனைத்தையும் அவர்தான் திறம்பட எடுக்கிறார். அவர் தான் என்னுடைய பலமே. எப்போதும் என்னை பாசிட்டிவாக அனுஷ்கா தான் வைத்துள்ளார்.
அது தான் உங்கள் வாழ்க்கை துணையிடமிருந்து நீங்கள் எதிர்பார்ப்பீர்கள். எனக்கு அது கிடைத்ததில் மிகப் பெரும் பாக்கியமே. அனுஷ்காவுக்கு கிரிக்கெட் குறித்து நன்றாக புரிகிறது. அணியில் இருக்கும் அனைத்து வீரர்களின் உணர்வுகளையும் புரிந்து கொள்வார். அதைப் புரிந்து கொள்வது தான் மிக மேன்மையான விஷயம்’ என்று மனைவியைப் புகழ்ந்து தள்ளியுள்ளார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading இவள் தான் என் ரியல் கேப்டன்..- மனைவி மேல் உருகும் விராட் Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை