தெலுங்கு இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில்,மறைந்த முன்னாள் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை பற்றிய படம், ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரில் வெளியாககிறது இப்படம் தெலுங்கில் ‘மகாநதி’ என்ற பெயரிலும் வெளியாகிறது.
இப்படத்தில் கீர்த்திசுரேஷ் சாவித்திரியாக நடிக்கிறார். அவரது கணவர் ஜெமினி கணேசனாக, துல்கர் சல்மான் நடிக்கிறார். நடிகை சமந்தா பத்திரிகை நிருபராக வருகிறார். பிரகாஷ்ராஜ் அலுரிசக்ரபாணி என்ற கதாசிரியர் வேடத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படம் அடுத்த வருடம் மார்ச் 29 ரிலீஸ் ஆகும் என அறிவிக்கபட்டுள்ளது.