ஜெயம் ரவி நடிப்பில் `டிக் டிக் டிக்' படம் வருகிற குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.
அடுத்து சுந்தர்.சி இயக்கத்தில் `சங்கமித்ரா' படத்தில் ஜெயம் ரவி நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஏப்ரல் மாதம் தொடங்க இருக்கிறது. இதற்கிடையே ஜெயம் ரவி புதுமுக இயக்குநர் கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜகுமார் தயாரிக்கும் இந்த படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார்.