லீவ் லெட்டரை ரெடியா வெச்சுக்கோங்க மக்களே.. தனுஷின் அன்புக் கட்டளை

May 29, 2018, 16:01 PM IST

காலா படம் வரும் ஜூன் 7ம் தேதி வெளியாக உள்ளதால், அன்றைய தினத்திற்கான லீவ் லெட்டரை தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள் என்று ரசிகர்களுக்கு தனுஷ் அன்புக் கட்டளை விடுத்துள்ளார்.

கபாலி படத்திற்கு பிறகு ரஞ்சித் - ரஜினிகாந்த் கூட்டணியில் இரண்டாவது முறையாக காலாவில் இணைந்துள்ளனர். படப்புடிப்புகள் மற்றும் போஸ்ட் வொர்க்குகள் முடிந்த நிலையில், காலா படம் வரும் ஜூன் மாதம் 7ம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில், காலா படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் நேற்று அவரது ட்விட்டர் பக்கத்தின் காலா டிரைலர் ரிலீசாகும் நேரத்தை அறிவித்தார். அதனுடன், “வரும் ஜூன் மாதம் 7ம் தேதி காலா ரிலீசாகிறது. அனைவரும் தேதியை குறிப்பிட்டு லீவ் லெட்டரை தயாராக வைத்துக் கொள்ளுங்கள்”என்று குறிப்பட்டு பதிவிட்டார்.

கபாலி படத்தின்போது, சில ஐடி நிறுவனங்கள் விடுமுறை அளித்ததும், பலர் குழுக்கலாக விடுமுறை எடுத்து படம் பார்க்க சென்ற நிகழ்வுகள் நடந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading லீவ் லெட்டரை ரெடியா வெச்சுக்கோங்க மக்களே.. தனுஷின் அன்புக் கட்டளை Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை