6 மணி படப்பிடிப்புக்கு 5 மணிக்கே வரும் முன்னணி நடிகர்

Advertisement
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நடிகராக உயர்ந்து இருப்பவர் நடிகர் சிம்பு. 
தமிழர்களுக்கு ஆதரவாக  ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு தனது கருத்துக்களையும்  பதிவு செய்துள்ளார். அதுமட்டுமின்றி சமீபத்தில் காவேரி நதிநீர் பங்கீட்டில் கர்நாடக மக்களுக்கு ஒரு வேண்டுகோளாக தமிழர்களுக்கு தண்ணீர் கொடுத்து கர்நாடக மக்கள் தங்களுக்கு காவேரி நதிநீர் கொடுப்பதில் சிக்கல் இல்லை என நிரூபிக்கும் வகையில்  ஒரு புகைப்படத்தை  வெளியிடுமாறு கேட்டு கொண்டார் அதற்கு பல தரப்பினர் பாராட்டு தெரிவித்து இருந்தனர்.
இப்படி பல சமூகம் சார்ந்த விஷயங்களில் சிம்பு குரல் கொடுப்பவர். இவ்வளவு நல்ல பெயர் எடுத்த சிம்பு தான் சார்ந்த சினிமா துறையில் பல சர்ச்சைகளில் அவ்வப்போது சிக்குவது வாடிக்கையாக கொண்டுள்ளார். அதில் அனைவரும் எப்போதும் சொல்லுவது படப்பிடிப்புக்கு தாமதமாக வருகிறார். காலதாமதமாக வருவது மட்டுமின்றி சில நேரங்களில் படப்பிடிப்பை ரத்து செய்வாராம். இதனால் இவரின் மீது தயாரிப்பாளர்களுக்கு கோபம் ஏற்பட்டதுடன் சிபாரிசு செய்வதையும் கை விட்டு வந்தனர்.
தற்போது சிம்பு மணிரத்னம் இயக்கத்தில் செக்க சிவந்த வானம் என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். அரவிந்த் சாமி, விஜய் சேதுபதி,அருண் விஜய் என முன்னணி நடிகர்களும் இந்த படத்தில் இணைந்துள்ளனர். 
சமீபத்தில் அரவிந்த் சாமி ஒரு பேட்டியில் சிம்புவை புகழ்ந்துள்ளார். அதில் படப்பிடிப்பு 6 மணி என்றால் நான் 5.40க்கு செல்வேன். ஆனால் சிம்புவோ 5 மணிக்கே படப்பிடிப்பு தளத்திற்கு அனைவர்க்கும் முன்பே வந்துவிடுகிறார். அவரை பற்றி கிசுகிசுக்களை நானும் கேள்வி பட்டு இருக்கிறேன். இது சிம்புவின் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. 
சமீபத்தில் எழுமின் என்ற திரைப்பட வெளியீட்டு விழாவில் சிம்பு கொடுத்த உறுதி மொழியே இனி படப்பிடிப்புக்கு தாமதமாக வர மாட்டேன் என்பது தான். அதனை அப்படியே செயல்படுத்தி அசத்தி வருகிறார் சிம்பு.
Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
/body>