இயக்குநர் மிஷ்கின் நடிக்கும் புதிய படத்திற்கு கதாநாயகியை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தை இயக்கிய ராம் பிரகாஷ் ராயப்பா தற்போது புதிதாக சுட்டுபிடிக்க உத்தரவு எனும் படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தில் நடிகர் விக்ராந்த் மற்றும் இயக்குநர்கள் மிஷ்கின், சுசிந்தீரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இயக்குநர் சுதீந்திரன் நடிக்கும் முதல் படம் இதுவாகும். இந்த படத்தை பி.கே. ராம்மோகன் தயாரிக்கிறார். முழுக்க முழுக்க ஆக்ஷன் கதைக்களத்தை கொண்ட படமாக இது உருவாக உள்ளது.
தற்போது இந்த படத்திற்கான நடிகர் - நடிகையரை தேர்வு செய்யும் பணி நடைபெறுகிறது. குறிப்பாக கதாநாயகியை தேர்வு செய்யும் பணியானது நடைபெற்று வருகிறது. நன்கு தமிழ் தெரிந்த பெண் ஒருவரை கதாநாயகியாக தேர்வு செய்ய படகுழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. உங்களுக்கும் இந்த படத்தில் நடிக்க விருப்பம் இருந்தால் உங்கள் விண்ணப்பத்தை film.spu@gmail.com எனும் இமெயில் முகவரிக்கு அனுப்பவும். ஆல் தி பெஸ்ட் கேர்ள்ஸ்!