கர்நாடக மாநில முதலமைச்சராக பதவி ஏற்ற குமாரசாமியை இரண்டு நாட்களுக்கு முன்பு சந்தித்தார் கமல்ஹாசன். காவிரி விவகாரம் பற்றி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று குமாரசாமி கூறியதாக கமல் பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்.
இந்நிலையில் கமல்ஹாசன் குமாரசாமி சந்திப்பு குறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் கருத்துக்களையும் கண்டனத்தையும் கூறிவருகிறார்.
கமல்ஹாசன் குமாரசாமியை சந்தித்து காவிரி விவகாரத்தை பற்றி பேசியதும் தவறு இல்லை என்றும். ஆனால் அவர் செய்த மிக பெரிய தவறு காலா திரைப்படத்தை பற்றி ஒரு வார்த்தை கூட பேசாமல் வந்து இருப்பது என தனது கண்டனத்தை பதிவு செய்து இருக்கிறார் நடிகர் பிரகாஷ்ராஜ்.
கர்நாடக முதல்வரிடம் காலா பற்றி பேசாமல் இருப்பது தவறு என்றும். விஸ்வரூபம் திரைப்பட விவகாரத்தில் தனக்காக அனைவரும் போராட வேண்டும் என்ற நோக்கத்தோடு பெரிதுபடுத்தினார் என்பது அனைவர்க்கும் தெரிந்ததே.
இப்போது காலா திரைப்பட விவகாரமும் இதே மாதிரி ஒரு பிரச்சனையை சந்தித்து வரும் வேளையில், மாநிலத்தின் முதலமைச்சரை சந்தித்த கமல் சக நடிகரின் படம் வெளியாவதில் சிக்கல் இருக்கிறது என்ற தனது ஆதரவு கருத்துக்களை பகிராமல் வந்தது வருத்தமளிக்கிறது என்றும் தனது கண்டனத்தை கமலுக்கு தெரிவிக்கிறேன் என்று கூறினார்.
காலா படத்திற்காக பேசுவது எனது உரிமை. எல்லா படத்திற்காகவும் குரல் கொடுப்பேன் என்றும். அது எனது கடமை என்றும் பிரகாஷ்ராஜ் கூறினார்.கர்நாடகாவில் பா.ஜ.க., காங்கிரஸ், ம.ஜ.த என எந்த கட்சி ஆட்சி செய்தாலும் கருத்துரிமையை பாதுகாக்க வேண்டும் என்றும், சமூக விரோதிகள் செய்யும் செயலை பார்த்து அமைதியாக இருக்க கூடாது என்றும், படத்தை வெளியிட விடாமல் சிலர் செய்யும் போராட்டங்களை தடுக்காமல் இருப்பது தவறு என்றும் நடிகர் பிரகாஷ்ராஜ் கூறினார்.
ஒரு படம் பிடிக்கவில்லை என்றால் அந்த திரைப்படத்தை பார்க்காமல் இருப்பதே சரியானதாக இருக்கும் என்றும் கூறினார்.