திரைப்படங்களை, குறிப்பாகத் தமிழ் திரைப்படங்களை வெளியான அன்றே இணையதளத்தில் வெளியிடும் தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.
தமிழக சட்டசபை இன்று கூடியது. இன்றைய கூட்டத்தொடரில் நடிகரும் எம்.எல்.ஏ-வுமான வாகை சந்திரசேகர், சட்டத்துக்குப் புறம்பாக செயல்பட்டுக் கொண்டு வரும் தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் குறித்து கேள்வி எழுப்பினார்.
அவர் சட்டசபையில் பேசுகையில், “யார் இந்த தமிழ் ராக்கர்ஸ் இணையதள அட்மின் ஆக செயல்படுவது? அவர்களால் எப்படி ஒரு திரைப்படம் வெளியான அன்று, இல்லை, வெளியாவதற்கு ஒரு நாள் முன்பே அத்திரைப்படத்தை இணையதளங்களில் வெளியிடுகின்றனர்?
அவர்கள் எங்கிருந்து எப்படிச் செயல்படுகிறார்கள் என்பது தெரியாமல் தமிழகக் காவல்துறை கலங்கி நிற்கிறது. சினிமாக்களில் வருவது போல தமிழ் ராக்கர்ஸ் ஆன்டி ஹீரோவாக மக்கள் மனதில் இடம்பிடித்து நிற்கிறது” எனக் குற்றம் சுமத்தினார்.