பிரபல நடிகை சோனாலி பிந்த்ரேவுக்கு புற்றுநோய்

by Isaivaani, Jul 4, 2018, 16:43 PM IST

தமிழில் காதலர் தினம் படம் மூலம் அறிமுகமான நடிகை சோனாலி பிந்த்ரேவுக்கு புற்றுநோய் இருப்பதாகவும், இதற்காக அமெரிக்காவில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் பிரபல நடிகை சோனாலி பிந்த்ரே. இவர் தமிழில் காதலர் தினம் படம் மூலம் அறிமுகமானார். முதல் படத்திலேயே இவர் பிரபலமாகினார். இதன் பிறகு ஒரு சில படங்களில் நடித்து வந்தார்.

43 வயதாகும் சோனாலி பிந்த்ரேவுக்கு தற்போது புற்றுநோய் இருப்பதை கண்டுப்பிடித்துள்ளதாகவும், இதற்காக அமெரிக்காவில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

இதுகுறித்து சோனாலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: உடலில் அதிக வலி ஏற்பட்டதன் காரணமாக மருத்துவரை சந்தித்தேன். அவர்கள், சில பரிசோதனைகளை மேற்கொள்ள கூறினார்கள். தாங்க முடியாத வலியில் பல்வேறு சோதனைகள் செய்த பிறகு, எனக்கு புற்றுநோய் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, நியூயார்க்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். உறவினர்களும், நண்பர்களும் எனக்கு உறுதுணையாக இருக்கின்றனர். அவர்களுடன் ஆதரவால் நான் விரைவில் குணமடைந்துவிடுவேன்.
இவ்வாஅதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

You'r reading பிரபல நடிகை சோனாலி பிந்த்ரேவுக்கு புற்றுநோய் Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை