விக்ரம் வேதா 100வது நாள் கொண்டாட்டம்

புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் வெளியான விக்ரம் வேதா படத்தில் விஜய் சேதுபதி - மாதவன் ஆகியோர் நடித்திருந்தனர் இந்த படம் வெளியானது முதலே நல்ல வரவேற்பை பெற்றது . இந்த படம், 100 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.  இந்த படத்தின் 100-வது நாள் கொண்டாட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது.

இதில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி, கதிர், இயக்குநர் புஷ்கர் - காயத்ரி, தயாரிப்பாளர் சசிகாந்த், சாம்.சி.எஸ் உள்ளிட்ட `விக்ரம் வேதா' படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.
இதில் விஜய் சேதுபதி பேசும் போது, "எனக்கு தெரிந்தவரை, தர்மதுரை படத்திற்கு பிறகு, எனது நடிப்பில் 100 நாட்களை கடந்து ஓடும் படமாக `விக்ரம் வேதா' அமைந்ததில் மகிழ்ச்சி. பலரும், பல்வேறு விதத்தில் பாராட்டிய படம் தான் `விக்ரம் வேதா'. ஆனால் இந்த படத்தால் சுயநலமாக நான் அடைந்தது என்னவென்றால், மக்களின் அன்பையும், நன்மதிப்பையும் சம்பாதித்திருக்கிறேன். என்னை வேறுவிதமாகக் காட்டி மக்களிடம் கொண்டு சேர்த்த புஷ்கர் - காயத்ரிக்கு நன்றி. அதே போல் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. எனக்கு வரலாறு என்று ஒன்று எழுதினால் அதில் இந்த படம் முக்கிய இடத்தில் இருக்கும்" என்றார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS
Advertisement
மேலும் செய்திகள்
Nayanathara-s-kolaiyuthir-kaalam-again-postponed
நாளைக்கும் நயன்தாரா படம் ரிலீஸ் இல்லை?
Actor-Kathir-finished-his-portion-in-Bigil-Movie
பிகில் படத்தில் தனது போர்ஷனை முடித்த கதிர்!
Tamilnadu-brahmin-association-condemns-commedy-actor-santhanam-for-defaming-brahmin-community-in-A1-cinema
சந்தானம் நடித்த ஏ1 படத்தை யாரும் பார்க்காதீர்கள்... பிராமணர் சங்கம் வேண்டுகோள்
We-do-not-freedom-speech-express-good-opinions-Film-director-SA-Chandra-Sekar
நல்ல கருத்துகளையும் கூற முடியவில்லை; பேச்சு சுதந்திரமும் இல்லை - இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் வேதனை
vickram-enjoyed-on-watching-Kadaram-kondan-in-kasi-theatre-with-fans
கடாரம் கொண்டான் ரிலீஸ், தியேட்டருக்கு வந்த விக்ரம்; ரசிகர்கள் ஆரவாரம்
Tanjore-Tamil-girl-mastered-in-Rap-Music-world
ராப் இசையில் கலக்கும் தஞ்சாவூர் பொண்ணு ஐக்கி பெர்ரி!
Bigil-Song-Leaked-and-goes-viral-movie-crew-was-shocked
லீக்கானது பிகில் பட பாட்டு; அப்செட்டில் விஜய், ஏ.ஆர். ரஹ்மான்!
Man-arrested-for-harrassing-Bengali-actress-Arunima-Ghosh-on-social-media
பிரபல வங்காள நடிகைக்கு சமூக வலைதளம் மூலம் 'பாலியல் தொல்லை'! மர்ம நபர் கைது
Kangana-Sister-blame-Tapsee-directly-and-a-cold-war-started-in-bollywood
பாலிவுட்டில் டாப்ஸி கிடு கிடு வளர்ச்சி; கடுப்பில் கங்கனா குடும்பம்!
Three-Bollywood-Actors-play-villain-role-against-Super-star-Rajinikanth
ரஜினியுடன் மோதும் 3 பாலிவுட் நடிகர்கள்!
Tag Clouds