பிரபு, பிரபு தேவாவின் நடிப்பில் சார்லி சாப்ளின்-2

by Nabil, Dec 16, 2017, 23:38 PM IST
அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரிக்கும் படம் ‘சார்லி சாப்ளின்-2’
2002-ஆம் வெளியாகி வரவேற்பை பெற்ற ‘சார்லி சாப்ளின்’. இதில்   பிரபு, பிரபு தேவா, அபிராமி, காயத்ரி ரகுராம், லிவிங்ஸ்டன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். காமெடி படமாக உருவான இந்த படத்தின் இரண்டாவது பாகம் தற்போது உருவாகி வருகிறது. இதில் பிரபுதேவா, நிக்கி கல்ராணி, அடா சர்மா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 
 
முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாக இருக்கும் இந்த படத்தில் இளைய திலகம் பிரபுவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். முதற்கட்டப படப்பிடிப்பு கோவாவில் முடிந்த நிலையில், இரண்டாவது கட்ட படப்பிடிப்பு நேற்று முதல் தொடங்கியது. அதில் பிரவுதேவா - பிரபு 15 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்து நடித்துள்ளனர். 
 
முதல் பாகத்தை இயக்கிய சக்தி சிதம்பரம் இந்த பாகத்தையும் இயக்குகிறார். 
அம்ரிஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு செளந்தர்ராஜன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். பிரபல நடிகரும், எழுத்தாளருமான கிரேசி மோகன் இந்த படத்திற்கு திரைக்கதை எழுதுகிறார். 
 
 

You'r reading பிரபு, பிரபு தேவாவின் நடிப்பில் சார்லி சாப்ளின்-2 Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை