அமெரிக்காவின் நீலப்பட புகழ் சன்னி லியோன் இப்போது பாலிவுட்டில் பிசியான நடிகை, உலகம் முழுவதும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டவர், கடந்த வருடம் கூகுலில் அதிகம் பேரால் தேடப்பட்டவர்கள் பட்டியலில் மோடியை பின்னுக்குத் தள்ளி மெர்சல் காட்டியவர்.
இந்தியாவிற்கு வந்த புதிதில், தமிழில் தலைகறி என்ற படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடியதோடு தனது தமிழ் சேவையை நிறுத்திக்கொண்டார், தற்போது ஒரு படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கான பேச்சுக்கள் நடந்து வருகிறது,
இந்தி பட உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்,
அவரை பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க வைக்க பலர் முயன்று வருகிறார்கள்,
இந்நிலையில், (2018) புத்தாண்டை உற்சாகமாக வரவேற்பதற்காக வரும் 31-ம் தேதி இரவு பெங்களூருவில் சன்னிலியோனின் நடன நிகழ்ச்சிக்கு அங்குள்ள ஒரு அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்தனர்,
இதில் சன்னிலியோன் கவர்ச்சி நடனம் ஆடுவார் என்று தகவல் பரவியது, அதனால் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க பல இளைஞர்கள் ஆர்வத்தோடு டிக்கெட் வாங்கினார்கள்.
இந்த நிலையில், நடிகை சன்னிலியோன் பெங்களூருவில் புத்தாண்டு நிகழ்ச்சியில் பங்கேற்க கூடாது என்று கர்நாடக ரக்ஷன யுவ சேனை உள்ளிட்ட சில கன்னட அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. சன்னி லியோனால் கர்நாடக கலாசாரம் கெடுவதை ஏற்க முடியாது என்று அந்த அமைப்புகள் கூறின.
போராட்டம் வலுத்த நிலையில், சன்னி லியோனின் நடனத்துக்கு கர்நாடக அரசு தடை விதித்து உள்ளது.
இதுபற்றி கர்நாடக உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறுகையில், மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் சன்னி லியோனின் நடன நிகழ்ச்சியை அனுமதிக்க வேண்டாம் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் கன்னட கலாசாரம், பண்பாடு தொடர்பான நிகழ்ச்சிகளை நடத்தலாம் என்றும், சன்னி லியோனின் நடனத்திற்கு மட்டுமே தடை என்றும் அவர் கூறியுள்ளார்.