ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ஜெயில் படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ்

வசந்த பாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்து உருவாகி வரும் படத்தின் பெயர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

வசந்த பாலன் இயக்கத்தில் வெளிவந்த அங்காடித்தெரு, வெயில், அரவான், காவியத்தலைவன் உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கியவர். அடுத்ததாக, ஜி.வி.பிரகாஷ் வைத்து வசந்த பாலன் இயக்கி வரும் படத்தின் பெயர் ஜெயில் என்று இன்று அறிவிக்கப்ப்டடுள்ளது.

இத்துடன், பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளது.
ஜி.வி.பிரகாஷின் 17வது படமாக ஜெயில் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில், ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அபர்ணதி, நந்தன் ராம், பசங்க பாண்டி, ராதிகா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்துள்ளார். கிரிக்கஸ் சினி கிரியேஷன்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளார்.