சிம்புவை டார்ச்சர் செய்த சந்தானம்

Dec 19, 2017, 20:18 PM IST

சக்க போடு போடு ராஜாவில் முதல்முறையாக இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ள நடிகர் சிம்புவை டார்ச்சர் செய்தோம் என்ற ரகசியத்தை படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சந்தானம் போட்டு உடைத்துள்ளார்.

சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சக்க போடு போடு ராஜா’. சேதுராமன் இயக்கியிருக்கும் இந்த படத்தில், சந்தானம் ஜோடியாக வைபவி ஷாண்டில்யா நடித்துள்ளார். நடிகர் விவேக் காமெடியனாக நடித்திருக்கும் இந்த படத்தில், ரோபோ சங்கரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

சிம்பு முதன்முறையா இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். இவரது இசையில், அனிருத், யுவன் சங்கர் ராஜா, லியோன் ஜேம்ஸ், டி.ராஜேந்தர்&உஷா ஆகியோர் பாடியுள்ளனர்.

சிம்புவை முதலில் இசையமைக்க கேட்டபோது முதலில் தயங்கியிருக்கிறார். சந்தானமும், விடிவி கணேஷூம் கேட்டுக் கொண்டதற்காக ஒப்புக் கொண்டாராம். ஆரம்பத்தில் தயக்கம் இருந்தாலும் எதிலும் பின்வாங்காமல் மளமளவென ட்யூன்களை போட்டுக் கொடுத்துவிட்டாராம் சிம்பு.

பாடல்களின் சூழ்நிலைகளை நடுராத்திரியில்தான் போன் போட்டு சிம்புவிடம் சொல்வோம். அவரும் பொறுமையாகக் கேட்டு, அசத்தலான ட்யூன்களைப் போட்டுக் காட்டுவார். இப்படி நிறைய சிம்புவை டார்ச்சர் பண்ணோம். எங்களின் டார்ச்சரை சகித்துக் கொண்டு அருமையான இசையை அமைத்திருக்கிறார் என்றார் சந்தானம்.

You'r reading சிம்புவை டார்ச்சர் செய்த சந்தானம் Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை