இந்தியாவில் முதன் முதலில் தியேட்டர்களில் டால்பி அட்மோஸ் மற்றும் ஆரோ 11.1 என்ற புதிய தொழில் நுட்பத்தை கொண்டு இயங்கி வருகிறது சத்யம் சினிமாஸ்.
சென்னையில் மட்டுமல்ல இந்தியாவில் 7 முக்கிய மாநிலங்களில் அதில், 10 நகரங்களில் தனது முத்திரையை பதித்துள்ளது சத்யம் சினிமாஸ் குழுமம். 70களில் துவங்கப்பட்ட சத்யம் சினிமாஸ் பின்காலத்தில் இது ஒரு நல்ல தொழிலாக இருக்க முடியாது என என்னி அதனை ரியல் எஸ்டேட் நிறுவனமாக துவங்கலாம் என்ற நிலைக்கு சென்றது. பின்னர், தியேட்டர் என்றால் அது சத்யம் தியேட்டர் தான் என்ற நிலை தற்போது மாறியுள்ளது.
தியேட்டர் மட்டுமில்லாமல், படங்களை விநியோகிக்கவும் படங்களை இயக்கவும் துவங்கியது சத்யம் தியேட்டர் குழுமம். திரு திரு துரு துரு என்ற படம் முதல் திரைப்படமாக தயாரித்தது எஸ்.பி.ஐ குழுமம்.
சத்யம் குழுமம் தற்போது சென்னையில் மட்டும் நான்கு முக்கிய இடங்களில் இயங்கி வருகிறது. சத்யம் ராயப்பேட்டை, எஸ்கேப், பளாசோ, எஸ்.பி.ஐ-2 பெரம்பூர், திருவான்மியூர். மேலும் எஸ்.பி.ஐ சினிமாஸ் குழுமம் தனது தொழிலை விரிவுபடுத்த மேலும் சில நகரங்களில் தியேட்டர்களை கட்ட முடிவு செய்தது.
ஆனால், எஸ்.பி.ஐ சினிமாஸ் நிறுவனங்களுக்கு போட்டியாக பி.வி.ஆர். சினிமாஸ் நிறுவனமும் இறங்கியுள்ளது. சென்னையில் மூன்று முக்கிய இடங்களில் பி.வி.ஆர். சினிமாஸ் இயங்கி வருகிறது. ஸ்கை வாக், பி.வி.ஆர். வேளச்சேரி, பி.வி.ஆர். கிராண்ட் கலாட்டா மீனம்பாக்கம் என்று தனது ராஜ்யத்தை விரிவுபடுத்தியுள்ளது.
இந்நிலையில், சத்யம் சினிமாஸ் நிறுவனத்தை கைப்பற்றும் விதமாக பி.வி.ஆர் சினிமாஸ் நிறுவனம் காய் நகர்த்தியுள்ளது. சுமார் 850 கோடி ரூபாய்க்கு சத்யம் சினிமாஸ் நிறுவனத்தை வாங்கியுள்ளது பிவிஆர். சுமார் 60 நகரங்களில் இயங்கி வரும் பி.வி.ஆர். சினிமாஸ் நிறுவனம், எஸ்.பி.ஐ சினிமாஸ் நிறுவனத்தை வாக்கியத்தன் மூலம் அதன் தியேட்டர்களின் எண்ணிக்கையை கணிசமாக உயர்ந்துள்ளது.