சின்னத்திரை டூ பெரியத்திரை.. ஹீரோவாகும் விஜய் டிவியின் அடுத்த பிரபலம்

விஜய் டிவி நிகழ்ச்சிகள் மூலம் சின்னத்திரையில் கலக்கி வந்த ரியோ, தற்போது ஹீரோவா பெரியத்திரையில் கலக்க தயாராகிவிட்டார். அதுவும் யார் தயாரிப்பில் தெரியுமா ?

விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் அறிமுகமாகி, ரியாலிட்டி ஷோக்களில் தொகுப்பாளராக வலம் வந்து ரசிகர்களை கவர்ந்தவர் ரியோ.
சமீபத்தில் தான், சரவணன் மீனாட்சி சீரியல் முடிந்தது. இந்நிலையில், ரியோ சின்னித்திரையில் இருந்து பெரியத்திரைக்கு சென்று, அதுவும் ஹீரோவாக நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிக்க உள்ளாராம்.

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராக அறிமுகமாகும் படம் கனா. இந்த படம் பெண்கள் கிரிக்கெட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. பிரபல பாடகர், நடிகர் அருண் ராஜா இயக்கும் இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா, சத்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அப்போது பேசிய சிவகார்த்திகேயன், தான் தயாரிக்கும் பெயரிடப்படாட புதிய படத்தில் பிரபல தொகுப்பாளர் ரியோ ராஜ் தான் கதாநாயகனாக நடிக்க உள்ளார் என்றார்.

விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பெரியத்திரைக்கு சென்று முன்னணி ஹீரோக்களில் ஒருவராக மாறியுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். தற்போது, ஹீரோவாக நடிக்க வாய்ப்பு அளித்துள்ளதால் மகிழ்ச்சியில் உள்ளார் ரியோ.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds