ரஜினிகாந்த் - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் பேட்ட

Sep 8, 2018, 09:52 AM IST

பல வெற்றிப் படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இயக்கும் திரைப்படத்தின் பெயர் மற்றும் அதன் மோஷன் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது.

பிட்சா, பிட்சா 2, இறைவி உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கியவர் கார்த்திக் சுப்புராஜ். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரஜினிகாந்தை வைத்து படம் இயக்க இருப்பதாக தெரவித்தார்.

அதன்படி, கார்த்திக் சுப்புராஜ் - ரஜினிகாந்த் கூட்டணியில் படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில், விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் நேற்று மாலை 6 மணியளவில் வெளியிடப்பட்டது.

அப்போது, படத்தின் பெயர் பேட்ட என அறிவிக்கப்பட்டது. இந்த படம் ரஜினியின் 165வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதோ பேட்ட படத்தின் மோஷன் போஸ்டர்..

You'r reading ரஜினிகாந்த் - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் பேட்ட Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை