பெரும்பாலும், தனது ஒரு படத்திற்கும் மற்றொரு படத்திற்கும் குறைந்த பட்சம் ஒரு மாதமோ அல்லது ஒரு வாரமோ இடைவெளி விடுவார்கள். ஆனால், இம்முறை சென்னை பொண்ணு சமந்தாவின் சீமராஜா மற்றும் யூ-டர்ன் என 2 படங்கள் வரும் செப்டம்பர் 13ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டமாக திரைக்கு வருகின்றன. இரண்டிலும் அவருக்கு வெற்றி கிடைக்குமா?
பொன் ராம் – சிவகார்த்திகேயன் வெற்றி கூட்டணியில் இம்முறை இணைந்துள்ள சமந்தா, அழகு வழியும் பொம்மையாக மட்டும் அல்லாமல், வீரம் பேசும் சிலம்பு செல்வியாக களம் இறங்குகிறார். காமெடி ஃபார்முலாவில் 2 படங்களை ஹிட்டாக்கிய பொன்ராம் இம்முறை, ஆக்ஷன், பீரியட் என துணிந்து இறங்கியுள்ளார். இதனால், சீமராஜா மாஸ் கமர்ஷியல் எண்டெர்டெயினர் படமாக மட்டுமின்றி பரிசோதனை முயற்சியாகவும் அமைந்துள்ளது.
சமந்தாவின் மற்றொரு படமான யு-டர்ன், கன்னட மொழியில் இயக்குநர் பவன் குமார் இயக்கத்தில், ஷ்ரத்தா கபூர் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டடித்த படம். இந்த படத்தின் வெற்றிக்கு பின்னர் தான் விக்ரம் வேதா படத்தில் தமிழில் அறிமுகமானார் ஷ்ரத்தா கபூர். லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவை தொடர்ந்து, தமிழில் நாயகி கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியாகும் இந்த படமும் ஒரு சோதனை முயற்சி தான். ஆனால், இதுவும் செப்.,13ம் தேதியே வெளியாவதால், சமந்தாவிற்கு டபுள் சக்சஸ் கிடைக்குமா? என கோலிவுட் வட்டாரங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன.
மேலும், இதே நாளில் தெலுங்கில் சமந்தாவின் கணவர் நாக சைத்தன்யா நடித்துள்ள ஷைலஜா ரெட்டி அல்லுடு படமும் ரிலீசாவது கூடுதல் சிறப்பு.