கைகொடுத்த கடம்பவேல்ராஜா… சிரிக்க வைக்க தவறிய சீமராஜா!

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் படங்களை தொடர்ந்து, பொன்ராம் – சிவகார்த்திகேயன் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்தவுடன், ஒரு மாஸ் காமெடி எண்டர்டெயினர் இருக்கிறது என ரசிகர்கள் எதிர்பார்த்து தியேட்டருக்கு சென்றனர். ஆனால், சீமராஜா படத்தில் மாஸே தமாஸாகத்தான் இருந்தது.

வழக்கமான திரைக்கதை படத்தை ரசிக்க வைக்காமல் நகர்கிறது. சிவகார்த்திகேயன், சூரி காமெடி முந்தைய படங்களில் ஒர்க்கவுட் ஆன அளவுக்கு இப்படத்தில் கை கொடுக்கவில்லை. எப்போதாவது தான் தியேட்டர்களில் சிரிப்பு சத்தம் கேட்கிறது.

சமந்தா, சிலம்பம் சுற்றும் பி.டி. டீச்சராக வருகிறார். பாடல்களுக்கு மட்டுமே பயன்படும் ரோலாக, அவரது கதாபாத்திரம் எழுதப்பட்டதால், அவரது ரோலும் படத்திற்கு பெரிதளவில் கைக் கொடுக்கவில்லை.

சிங்கம்பட்டி சமாஸ்தானத்தின் மன்னர் வாரிசாக வரும் சிவகார்த்திகேயன் உடைகள் மற்றும் தோற்றத்தில் ஜமீன் பரம்பரையாக காட்சியளிக்கிறார். ஆனால், தந்தையாக வரும் நெப்போலியன் சாதாரணமாகவே படம் முழுக்க வந்து செல்கிறார்.

படத்தின் மெயின் வில்லன் லாலு, அதிகம் பேசுவதை விட அவரது மனைவியாக நடித்துள்ள சிம்ரன், அதிகம் பேசுகிறார். ஆனால், அவரது கதாபாத்திரம் திமிரு படத்தின் ஸ்ரேயா ரெட்டியை தான் நினைவு படுத்துகிறது.

முதல் பாதியில் நாயகி பின்னால், சுற்றும் நாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயன், இரண்டாம் பாதியில் வரும் 20 நிமிட பிளாஷ்பேக்கில், தமிழ் மன்னன் கடம்பவேல்ராஜாவாக கலக்கியுள்ளார். ஆனால், அந்த போர்ஷன், சீமராஜா படத்திற்கு சம்மந்தமே இல்லாதது போல், எழுதப்பட்டது படத்திற்கு பலம் கூட்ட தவறிவிட்டது.

சரித்திர போர்ஷனில் செலுத்திய கவனம் மற்றும் நேர்த்தியை, இயக்கு நர் பொன்ராம், படம் முழுவதும் செலுத்தியிருந்தால், சீமராஜா, பாசிட்டிவ் விமர்சனங்களை அள்ளியிருக்கும்.

இமானின் இசை, கீர்த்தி சுரேஷின் கேமியோ ரோல், சிவகார்த்திகேயனின் உழைப்பு, பாலசுப்ரமணியத்தின் ஒளிப்பதிவு, ரசிகர்களுக்கு ஆறுதலாக இருக்கிறது.

அடுத்த படத்திலாவது சிரிக்க வைப்பாரா சிவகார்த்திகேயன்? என்ற எதிர்பார்ப்பில் காத்திருப்போம்!

சீமராஜா ரேட்டிங் – 2.5/5.

 

Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

 

Recent Videos

Recent News

Most Read News

more headlines in our related posts

Related # news

Related News

News in Details

Parotta Suri has Six pack

வெண்ணிலா கபடி குழு படத்தில் பரோட்டா காமெடி மூலம் பிரபலமான பரோட்டா சூரி தற்போது அடையாளமே தெரியாமல் சி...

Will Samantha get double success ?

பெரும்பாலும், தனது ஒரு படத்திற்கும் மற்றொரு படத்திற்கும் குறைந்த பட்சம் ஒரு மாதமோ அல்லது ஒரு வாரமோ இ...

Samantha will acting as a 80-year old grandmother

தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் முன்னணி நாயகியாக இருந்து வரும் சமந்தா அடுத்து ஓர் படத்தில் 80 வ...

Actor soori danced oyilaattam in Aadi month function

சின்னத்திரையில் அறிமுகமான நடிகர் சூரி தற்போது தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தை பிடித்துவிட்டார். சூரி...

Single track of Seemaraja film movie released

சிவகார்த்திகேயன்&சமந்தா நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் சீமராஜா படத்தின் சிங்கி...

SeemaRaja movie releasing on Vinayaka Chathurthi

சிவகார்த்திகேயன் படம் தனுஷின் படத்திற்கு இணையாக வெளியாவது ரசிகர்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளத...