தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மகன் சண்முக பாண்டியன் ஆகியோரை வைத்து புதிய திரைப்படம் ஒன்றை இயக்கவிருப்பதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களின் மகன் சண்முக பாண்டியன் ‘சகாப்தம்’ என்ற திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானார். அதேபோல், சென்னை 28, கோவா, மங்காத்தா, பிரியாணி உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர் வெங்கட்பிரபு.
தற்போது இவர்களது கூட்டணியில் புதிய திரைப்படம் ஒன்று உருவாக இருப்பதாக பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். தற்போது முத்தையா இயக்கத்தில் மதுரவீரன் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பிரேமலதா கலந்துக்கொண்டு பேசினார்.
அப்போது அவர், விஜயகாந்த் மற்றும் அவருடைய மகன் இருவரையும் வைத்து வெங்கட்பிரபு விரைவில் ஒரு படத்தை இயக்குவார் என்று கூறினார். இதனால், விஜயகாந்த் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.