விஷாலுக்கு கிடைக்குமா ரெண்டாவது லட்டு? சண்டக்கோழி - 2 டிரெய்லர் ரிலீஸ்!

லிங்குசாமி இயக்கத்தில் விஷால், கீர்த்தி சுரேஷ், வரலக்‌ஷ்மி சரத்குமார் மற்றும் ராஜ்கிரண் நடிப்பில் வெளியாகியுள்ள ’சண்டக்கோழி 2’ டிரெய்லர் ரிலீசாகியுள்ளது.

விஷால் – லிங்குசாமி கூட்டணியில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான சண்டக்கோழி படம் இருவருக்கும் மாபெரும் வெற்றியை ஈட்டித் தந்தது. மறுபடியும் அந்த மேஜிக்கை நிகழ்த்த விஷால் – லிங்குசாமி கூட்டணி கைகோர்த்துள்ளது. ராஜ்கிரண் முதல் பாகத்தில் இருந்த கம்பீரத்தை இந்த படத்திலும் வெளிப்படுத்துகிறார். மீரா ஜாஸ்மினுக்கு பதிலாக கீர்த்தி சுரேஷ் நக்கல், நய்யாண்டி என ரவுசு கட்டுகிறார். வில்லியாக வரலக்‌ஷ்மி சரத்குமார் மிரட்டுகிறார்.

எப்படி இருக்கிறது டிரெய்லர்?

“அறுவாளுக்கு ஆடு தான் பயப்படனும்.. அய்யனார் பயப்படக்கூடாது” எனும் ராஜ்கிரணின் பவர்ஃபுல் பஞ்சுடன் டிரெய்லர் தொடங்குகிறது. முந்தைய பாகத்தின் தொடர்ச்சியா, அல்லது புதிய கதைக்களமா? என்பது ரிலீசுக்கு பிறகே தெரியவரும். விஷால், மீண்டும் நான் மதுரைக் காரன் தான் டா என்பது போல, மாஸ் காட்டுகிறார். “உன்னை கட்டிக்கிறேன்.. அவர வச்சிக்கிறேன்” என கீர்த்தி கூறும் வசனம், சமீபத்தில் கள்ளத் தொடர்பு கிரிமினல் குற்றமல்ல என நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நினைவு படுத்துகிறது.

திமிரு பட வில்லியை நினைவு படுத்துவது போல் உள்ளது வரலக்‌ஷ்மியின் வில்லித்தனம். “ஆம்பளைங்க வெட்டுனாதான் அருவா வெட்டுமா? பொம்பளைங்க வெட்டினாலும் அருவா வெட்டும்” என வரு சொல்லும் வசனம், திருப்பாச்சியில் விஜய் சொல்லும் வசனம் போல உள்ளது.

ரெண்டாவது லட்டு கிடைக்குமா?

இந்த ஆண்டு வெளியான ‘இரும்புத்திரை’ படம் விஷாலுக்கு மாபெரும் வெற்றியை தேடி தந்து 100 நாட்கள் ஓடிய படம் என்ற பெருமையையும் பெற்றுத் தந்தது. இதே போல, வரும் ஆயுதபூஜை கொண்டாட்டமாக வெளியாகவுள்ள சண்டக்கோழி2 படமும் விஷாலுக்கு வெற்றி தந்தால், விஷால், ரெண்டாவது லட்டையும் சாப்பிடுவார்! 

 

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds

READ MORE ABOUT :