எலி மான்ஸ்டரா இல்லை எஸ்.ஜே. சூர்யா மான்ஸ்டரா?

மாயா, மாநகரம் படங்களை தொடர்ந்து பொட்டென்ஷியல் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் புதிய படத்தில், எஸ்.ஜே. சூர்யா கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டரை படக்குழுவினர் நேற்று வெளியிட்டனர். ‘மான்ஸ்டர்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ‘ஒரு நாள் கூத்து’ படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்குகிறார்.

இயக்குநராக அறிமுகமான எஸ்.ஜே. சூர்யா பின்னர் ஹீரோவாக உருவாகினார். ஆனால், சில படங்களை தவிர அவருக்கு பல படங்கள் தோல்வியை தந்ததால், சற்று காலம் ஒதுங்கியிருந்தார். சமீபத்தில், வெளியான ஸ்பைடர் மற்றும் மெர்சல் படங்களில் வில்லன் அவதாரம் எடுத்த எஸ்.ஜே.சூர்யாவுக்கு மீண்டும் ஹீரோ சான்ஸ் கிடைத்து வருகிறது. அவரது நடிப்பில், உருவான ‘நெஞ்சம் மறப்பதில்லை’, ‘இறவாக் காலம்’ படங்கள் தயாராகி வெகு நாட்களான பின்னரும், ரிலீஸாகாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், ’ஒரு நாள் கூத்து’ படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ‘மான்ஸ்டர்’ என்ற படத்தில் எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாக நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ’மேயாதமான்’, ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் நடித்த நடிகை ப்ரியா பவானி சங்கர் நடித்து வருகிறார்.

எலி தான் மான்ஸ்டர்?

எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாக இருந்தபோதும், படத்தில் ஒரு எலிக்குத் தான் முக்கியத்துவமாம். ஸ்டுவர்ட் லிட்டில் என்ற ஹாலிவுட் படம் போல, எலியை மையப்படுத்தி படம் எடுக்கப்பட்டு வருகிறதாம். படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு நடந்து வருவதால், படத்தை புரமோட் செய்ய, மோஷன் போஸ்ட்டரையும் டைட்டிலையும் தயாரிப்பு நிறுவனமான பொட்டென்ஷியல் ஸ்டூடியோஸ் நேற்று மாலை அறிவித்தனர்.

 

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS
மேலும் செய்திகள்
We-do-not-freedom-speech-express-good-opinions-Film-director-SA-Chandra-Sekar
நல்ல கருத்துகளையும் கூற முடியவில்லை; பேச்சு சுதந்திரமும் இல்லை - இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் வேதனை
vickram-enjoyed-on-watching-Kadaram-kondan-in-kasi-theatre-with-fans
கடாரம் கொண்டான் ரிலீஸ், தியேட்டருக்கு வந்த விக்ரம்; ரசிகர்கள் ஆரவாரம்
Tanjore-Tamil-girl-mastered-in-Rap-Music-world
ராப் இசையில் கலக்கும் தஞ்சாவூர் பொண்ணு ஐக்கி பெர்ரி!
Bigil-Song-Leaked-and-goes-viral-movie-crew-was-shocked
லீக்கானது பிகில் பட பாட்டு; அப்செட்டில் விஜய், ஏ.ஆர். ரஹ்மான்!
Man-arrested-for-harrassing-Bengali-actress-Arunima-Ghosh-on-social-media
பிரபல வங்காள நடிகைக்கு சமூக வலைதளம் மூலம் 'பாலியல் தொல்லை'! மர்ம நபர் கைது
Kangana-Sister-blame-Tapsee-directly-and-a-cold-war-started-in-bollywood
பாலிவுட்டில் டாப்ஸி கிடு கிடு வளர்ச்சி; கடுப்பில் கங்கனா குடும்பம்!
Three-Bollywood-Actors-play-villain-role-against-Super-star-Rajinikanth
ரஜினியுடன் மோதும் 3 பாலிவுட் நடிகர்கள்!
Aadai-Movie-Director-cries-for-India-loss-in-World-Cup-semis
ஆடை பட இயக்குநரை அழ வைத்த தோனி!
Kaappan-Satellite-rights-bagged-by-Sun-tv
காப்பான் சேட்டிலைட் ரைட்ஸை வாங்கிய சன் டிவி!
Tomorrow-six-movies-will-be-release-in-kollywood
நாளைக்கு 6 படங்கள் ரிலீஸ்! ஜெயிக்கப்போவது யாரு?
Tag Clouds