பாலிவுட்டின் பிதாமகர் என அழைக்கப்படும் அமிதாப்பச்சனின் 76வது பிறந்த தினம் இன்று. இவர் நடித்த பல பாலிவுட் படங்களை ரீமேக் செய்துதான், கோலிவுட்டில் ரஜினி சூப்பர்ஸ்டார் என்பது மறுக்க முடியாத உண்மை.
வயது 73 ஆகின்றது. இன்னமும் அந்த கர்ஜனை கொஞ்சம் கூட இவரிடத்தில் குறையவில்ல. தற்போது, தனது வயதுக்கு ஏற்றாற்போல், நடித்து வரும் அமிதாப்பச்சன், வரும் தீபாவளிக்கு வெளியாகும், ஆமீர்கானின் தக்ஸ் ஆஃப் இந்தோஸ்தான் படத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு வாள் எடுத்து சண்டையிட்டு ஆக்ஷன் காட்சிகளிலும் பங்கேடுத்து தான் எப்போதும் பாலிவுட்டின் பீஷ்மர் என்பதை நிரூபித்துள்ளார்.
ஆனால், இன்றைய பிறந்த நாளை தனது ரசிகர்களுடனும், தனது குடும்பத்தினருடனும் அமிதாப் பச்சன் கொண்டாடவில்லை.
இதற்கு காரணம், தனது மகள் ஸ்வேதா நந்தாவின் மாமனாரும் தனது நெருங்கிய நண்பருமான ராஜன் நந்தாவின் மறைவு தான் காரணம் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்த தகவலால் அறிய முடிகிறது.
மேலும், சமீபத்தில், ராஜ் கபூரின் மனைவியும் இவரது உடன் பிறவா சகோதரியுமான கிருஷ்ண ராஜ் கபூர் மறைவும் அமிதாப்பை எந்தவொரு கொண்டாட்டத்தையும் கொண்டாட விடாமல் தடுத்துள்ளதாக தெரிகிறது.
இந்தியாவின் மிகப்பெரிய நடிகரான அமிதாப்பச்சன், தக்ஸ் ஆஃப் இந்தோஸ்தான் படத்தை தொடர்ந்து, தெலுங்கில், சிரஞ்சீவி, நயன்தாரா நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் ராஜகுருவாக நடித்து வருகிறார்.
மேலும், முதன்முறையாக தமிழ் சினிமாவில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகும் உயர்ந்த மனிதன் படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.