அருண்விஜய்யின் அடுத்த பட அப்டேட் இதோ!

Actor ArunVijay next movie update

by Mari S, Oct 31, 2018, 22:44 PM IST

பாண்டவர் பூமி படம் முதல் ஹீரோவாக பல படங்களில் அருண்விஜய் நடித்து வந்தாலும், அவருக்கு வலுவான அங்கீகாரம் கொடுத்தது, தல அஜித்தின் என்னை அறிந்தால் படம் தான். அந்த படத்தில் விக்டராக நடிப்பில் அசத்தியிருந்தார்.

அதன் பின்னர், குற்றம் 23 படம் சோலோ ஹீரோவாக சிறப்பான வெற்றியை அருண் விஜய்க்கு பெற்று தந்தது. சமீபத்தில் வந்த செக்கச்சிவந்த வானம் படத்தில், அருண் விஜய்யின் ரோல் பலராலும் பாரட்டப்பட்டது. அவருடையை சிக்ஸ் பேக் பாடி, அவருடைய மேனரிசம் என வெளுத்து வாங்கியிருந்தார் மனுஷன்.

அடுத்து அருண் விஜய் நடிப்பில் தடம் படம் ரிலீசுக்கு ரெடியாகியுள்ளது. இந்நிலையில், தனது புதிய படத்தின் அப்டேட்டை அருண் விஜய் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

அதில், மூடர்கூடம் படத்தின் இயக்குநர் நவீன் இயக்கத்தில் அருண்விஜய் ஹீரோவாக நடிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், இந்த படத்தில் அருண் விஜய்யுடன் விஜய் ஆண்டனியும் இணைந்து நடிக்கவுள்ளார் என்பது கூடுதல் சிறப்பு.

மூடர்கூடம் நவீன் இயக்கி நடித்துள்ள அலாவுதினும் அற்புத கேமரா படம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அடுத்த படத்திற்கான பூஜையை போட்டுவிட்டார்.

You'r reading அருண்விஜய்யின் அடுத்த பட அப்டேட் இதோ! Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை