50 கோடி ரூபாயை கடந்த சர்கார் முதல் நாள் வசூல்!

Sarkar movie first day collection crossed 50 crores

by Mari S, Nov 7, 2018, 12:49 PM IST

சர்கார் படத்தின் முதல் நாள் வசூல் 50 கோடி ரூபாயை கடந்துள்ளதாக பாஃப்டா நிறுவனர் மற்றும் தயாரிப்பாளரான தனஞ்செயன் தெரிவித்துள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், பழ.கருப்பையா, ராதாரவி நடிப்பில் நேற்று வெளியான சர்கார் படம் முதல் நாளில் தமிழ்நாடு முழுவதும் 32 கோடி ரூபாய் வசூலித்து புதிய சாதனையை படைத்துள்ளது என்றும், தியேட்டரில் விற்கும் பாப்கார்ன், குளிர்பானங்கள் உள்பட மொத்தம் சர்கார் திரைப்படத்தால் 50 கோடி ரூபாய்க்கும் மேல் நேற்று வசூல் செய்துள்ளதாக தனஞ்செயன் அறிவித்துள்ளார்.

24 ஏஎம் ஸ்டூடியோஸ் தயாரிப்பாளரான ஆர்.டி. ராஜாவும் படம் மாபெரும் வசூலை குவித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த வாரம் முழுவதும் படம் இதே ஸ்பீடில் ஓடினால், 200 கோடி ரூபாய் வரை வசூலை ஈட்டும் என கணித்துள்ளனர்.

You'r reading 50 கோடி ரூபாயை கடந்த சர்கார் முதல் நாள் வசூல்! Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை