புளூவேல் அரக்கனை பூர்ணா கண்டுபிடிப்பாரா?

Actress poorna acting BlueWhale movie

by Mari S, Nov 7, 2018, 17:28 PM IST

உலகையே உலுக்கிய புளூவேல் என்ற விளையாட்டு தற்போது, இருக்கும் இடமே காணாமல் சென்றுவிட்டது. புளூவேல் கேம் காரணமாக தற்கொலை செய்யப்பட்டதாக வந்த வழக்குகளும் வேறு காரணத்திற்காக தற்கொலை செய்து கொண்டனர் என போலீசாரும் வழக்குகளை முடித்து வைத்தனர்.

இந்நிலையில், நடிகை பூர்ணா போலீஸ் அதிகாரியாக நடிக்கும் படத்திற்கு புளூவேல் என கேமின் டைட்டிலேயே வைத்துள்ளனர். இயக்குநர் டி. ரங்கநாதன் இயக்கத்தில் புளூவேல் படம் உருவாகிறது. இப்படத்தில் இந்த மரண விளையாட்டை விளையாடும் சிறுவனாக மாஸ்டர் கபீஸ் கன்னா நடித்துள்ளார்.

நாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை முன்னணி மற்றும் முன்னாள் நாயகிகள் தேர்ந்தெடுத்து வருகின்றனர். நயன்தாரா தொடங்கி வைத்த இந்த பாதையை தற்போது பூர்ணாவும் பின்பற்ற துவங்கியுள்ளார். போலீஸ் அதிகாரி கெட்டப்பிற்காக, ஷார்ட் ஆக ஹேர் கட் செய்துள்ளார். ஜர்கின் உடையில் ரொம்ப மிடுக்காக உள்ளார். விரைவில் படத்தின் டீஸர் வெளியாகவுள்ளது.

You'r reading புளூவேல் அரக்கனை பூர்ணா கண்டுபிடிப்பாரா? Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை