சர்கார் படத்திற்கு அதிமுக கடும் நெருக்கடியை கொடுத்ததை தொடர்ந்து படத்தில் இருந்த சில காட்சிகள் நீக்கப்பட்டன. இந்நிலையில், இதற்கு வரலஷ்மி கண்டனம் தெரிவித்துள்ளார்.
சர்கார் படத்தில் ஆளுங்கட்சியான அதிமுக அரசை பல இடங்களில் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் வச்சி செய்துள்ளார். இதனை பொறுக்க முடியாத அதிமுகவினர் படத்தில் இருந்த சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என போராடினர். தியேட்டர்களில் வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டனர்.
இதனால், படத்தில் இருந்த சில காட்சிகள் நீக்கப்பட்டன. மேலும், படத்தில் வில்லியாக நடித்துள்ள வரலக்ஷ்மியின் பெயர் கோமளவல்லி என்பதை மியூட் செய்துள்ளனர்.
இந்நிலையில், இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள வரலஷ்மி,” ஒரு படத்தை பார்த்து பயப்படும் அளவுக்கு இந்த அரசாங்கம் வலுவற்றதாக இருக்கிறது. உங்கள் பெயரை நீங்களே கெடுத்துக் கொள்ளாதீர்கள், தயவு செய்து இந்த மாதிரியான முட்டாள்தனத்தை நிறுத்துங்கள். படைப்பாற்றலின் சுதந்திரத்தை பறிக்காதீர்கள்” என பதிவிட்டுள்ளார்.