விஜய்யின் சர்கார் படம் மெர்சலை விட வசூலில் சாதனை புரிந்ததோ இல்லையோ சர்ச்சையில் சரித்திரமே படைத்துள்ளது.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தொடங்கி பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் வரை அனைத்திலும் புதிது புதிதாக சர்ச்சைகள் வெடித்துக் கொண்டே இருக்கின்றன.
இந்நிலையில், தற்போது, திருச்சூரில் உள்ள ஒரு தியேட்டரில் சர்கார் படத்தில் விஜய் புகைப்பிடிக்கும் பேனரை ரசிகர்கள் வைத்துள்ளனர். இதற்கு திருச்சூர் சுகாதார துறை எதிர்ப்பு தெரிவித்து விஜய் மற்றும் கேரள விநியோகஸ்தர், தயாரிப்பாளர், தியேட்டர் உரிமையாளர் ஆகியோர் மீது வழக்கு தொடர்ந்துள்ளது.
இன்னும் சர்கார் படத்தை சுற்றி வேறு என்ன சர்ச்சையை கிளம்ப போகிறதோ தெரியவில்லை. மேலும், இது அனைத்தும் நெகட்டிவ் பப்ளிசிட்டி என்றும் கூறுகின்றனர்.