சிவகார்த்திகேயனின் 15வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை 24 ஏ.எம். ஸ்டூடியோஸ் அறிவித்துள்ளது.
இரும்புத்திரை இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கப் போவதாக சில வாரங்களுக்கு முன்னர் செய்திகள் வெளியாகின. அது தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சீமராஜா படத்தை தொடர்ந்து, ராஜேஷ் இயக்கத்தில் நயன்தாராவுடன் காமெடி படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன். அடுத்ததாக இன்று நேற்று நாளை இயக்குநர் ரவிக்குமாருடன் ஏலியன் தொடர்பான சை-ஃபை படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில், ஆக்ஷன் த்ரில்லராக உருவாகவுள்ள சிவகார்த்திகேயனின் 15வது படத்தை மித்ரன் இயக்குகிறார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பாளர் ஆர்.டி. ராஜா வெளியிட்டுள்ளார். இந்த படத்தில் நடிக்கப்போகும் நடிகர் நடிகையர் குறித்த தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.