பாகுபலியை தொடர்ந்து ராஜமெளலி இயக்கும் புதிய படமான RRR படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது.
டோலிவுட்டை ஹாலிவுட்டே பார்த்து வியக்கும் அளவிற்கு பாகுபலி எனும் 1500 கோடி ரூபாய் வசூல் படைத்த படத்தை இயக்கிய ராஜமெளலி, ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் உருவாகவுள்ள புதிய படத்தின் படப்பிடிப்பை இன்று ஆரம்பித்து விட்டார்.
ராஜமெளலி, ராம்சரண், ராமராவ்(ஜூனியர் என்.டி.ஆர்) இந்த மூவரின் முதல் எழுத்தான R-ஐ RRR என இந்த புராஜெக்டுக்கு வைத்துள்ளனர். படத்தின் அதிகாரப் பெயர் பின்னர் அறிவிக்கப்படும்.
இந்த படத்திற்கான பட பூஜை சமீபத்தில் பிரம்மாண்டமாக போடப்பட்டது. அதில், சிரஞ்சீவி, பிரபாஸ் மற்றும் ராணா உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில், இன்று காலை படப்பிடிப்பு துவங்கியது என ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆருடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் அமர்ந்திருக்கும் புகைப்படத்டை ட்விட்டரில் ராஜமெளலி பதிவிட்டுள்ளார்.