கேரளா வெள்ளத்திற்கு முதற் கரமாக தமிழக நடிகர்கள் பல லட்சம் ரூபாய் நிவாரண நிதியுதவி அளித்தனர். ஆனால், கஜா புயல் தாக்கி பாதிப்பு அடைந்துள்ள டெல்டாவை யாரும் கண்டு கொள்ளவில்லை என சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் கிழிக்க ஆரம்பித்தனர்.
இந்நிலையில், முதல் ஆளாக நடிகர் சிவகுமார், சூர்யா மற்றும் கார்த்தி இணைந்து 50 லட்சம் ரூபாயை நன்கொடையாக தர முன்வந்தனர்.
சூர்யா குடும்பம் நிவாரண நிதியை அறிவித்த நிலையில், நடிகர் விஜய் சேதுபதி 25 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.
அவரை தொடர்ந்து கஜா புயலில் தனது ரசிகர்களை களப் பணியில் ஈடுபட சொல்லியுள்ள நடிகர் சிவகார்த்திகேயன் 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக நடிகர் ஜி.வி. பிரகாஷ் 2 லாரிகளில் நிவாரண பொருட்களை வேதாரண்யத்திற்கு அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. நடிகர் ரஜினியின் மக்கள் மன்றம் சார்பில் ஸ்டிக்கர் ஒட்டி நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டதாக சர்ச்சையும் கிளம்பியுள்ளன.
அடுத்து விஜய், ரஜினி, கமல் எத்தனை லட்சங்கள் கொடுக்க உள்ளனர் என்றும் ராகவா லாரன்ஸ் இந்த முறையும் ஒரு கோடி கொடுப்பாரா என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
திமுக சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.