இன்கேம் இன்கேம் இன்கேம் காவாலே என தென்னிந்திய ரசிகர்களின் உதடுகளை முணுமுணுக்க வைத்த நடிகை ராஷ்மிகா தான் இவ்வாறு முகத்தை மூடி போஸ் கொடுத்துள்ளார்.
லண்டனுக்கு சுற்றுலா சென்றுள்ள கீத கோவிந்தம் படத்தின் நடிகை ராஷ்மிகா, தனது ட்விட்டர் பக்கத்தில் லண்டன் டைரிஸ் என தனது சுற்றுலா புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அதில், புகைப்படம் மற்றும் செல்பிக்களை எடுக்க தான் மிகவும் கூச்சம் கொண்டவள் என்றும் ஆனாலும், எனது ரசிகர்கள் கோரிக்கைக்காக செல்பிக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிடுகிறேன் என்றும் தெரிவித்து, சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
அதில் ஒரு புகைப்படத்தில் முகத்தை முழுவதுமாக மூடியும், மற்றொரு புகைப்படத்தில் கண்கள் தெரியும் வண்ணம் வாயை மூடியும் எடுத்துள்ளார். மேலும், இரு புகைப்படங்களில் ஹேப்பியாக போஸ் கொடுத்துள்ளார் ராஷ்மிகா.
அட்லி – விஜய் மூன்றாவது முறையாக இணைந்துள்ள விஜய் 63 படத்தில் ராஷ்மிகா நாயகியாக நடிக்க வாய்ப்புள்ளதாக செய்திகளும் வெளியாகி வருகின்றன. ஆனால், இதுவரை அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகவில்லை.