ரஜினியின் 2.0 படம் உலகம் முழுவதும் 10,000 தியேட்டர்களில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
லைகா நிறுவனம் 600 கோடி ரூபாய் பட்ஜட்டில் தயாரித்துள்ள 2.0 படம் முழுக்க முழுக்க 3டி கேமராவில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ரஜினியுடன் மோதும் அசுர வில்லனாக பாலிவுட் நாயகன் அக்ஷய் குமார் நடித்துள்ளார்.
இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் வெளியாகிறது என்றும் மேலும் பல மொழிகளில் டப்பிங் செய்து வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
10,000 தியேட்டர்களில் வெளியாகும் முதல் தமிழ் படம் என்ற பெருமையையும் 2.0 படம் பெற்றுள்ளது. பாகுபலி, டங்கல் படங்களின் சாதனைகளை இப்படம் முறியடித்து மாபெரும் வசூல் சாதனை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.