2.0 படத்தை மறுதணிக்கை செய்ய வேண்டும் – செல்போன் நிறுவனங்கள் திடீர் எதிர்ப்பு!

Cell phone companies are sudden resistance 2.0 movie must be rectified

by Mari S, Nov 27, 2018, 18:10 PM IST

2.0 படத்தை மறுதணிக்கை செய்ய வேண்டும் என செல்போன் கம்பெனிகள் கூட்டாக இணைந்து மனு தாக்கல் செய்துள்ளன.ரஜினியின் 2.0 படத்தில் எந்தவொரு அடிப்படை ஆதாரமும் இன்றி செல்போன்கள் பயன்பாடு குறித்து அபாண்டமாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக ரஜினி, இயக்குநர் ஷங்கர் மற்றும் படக்குழுவினர் மீது புகார் மனு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சர்கார் படத்தை மறு தணிக்கை செய்தது போல 2.0 படத்தையும் மறு தணிக்கை செய்யவேண்டும் எனவும் மத்திய தணிக்கைத்துறை, தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்துக்கு இந்திய செல்போன் ஆப்பரேட்டர்கள் சங்கத்தினர் புகார் அளித்துள்ளனர்.

வரும் நவம்பர் 29ம் தேதி 2.0 ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், அந்த படத்திற்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது படத்தின் வசூலை பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே, சர்கார் மற்றும் தக்ஸ் ஆப் இந்தோஸ்தான் படங்கள் விநியோகஸ்தரர்களுக்கு மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியதால், நாளை மறுநாள் 2.0 ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், இதுவரை டிக்கெட் புக்கிங்கை திரையரங்குகள் தொடங்க விடாமல் விநியோகஸ்தரர்கள் தரப்பு தடுத்துள்ளது படத்திற்கு மிகப்பெரிய சிக்கலாக உள்ள நிலையில், மீண்டும் ஒரு புதிய புயல் கிளம்பியுள்ளது.

You'r reading 2.0 படத்தை மறுதணிக்கை செய்ய வேண்டும் – செல்போன் நிறுவனங்கள் திடீர் எதிர்ப்பு! Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை