மகளுக்காக மறுபிறவி எடுக்கும் சந்திரகுமாரி: விரைவில் ராடானின் பிரம்மாண்ட படைப்பு

Advertisement

ராடான் தயாரிப்பில் ராதிகா சரத்குமாரின் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் சந்திரகுமாரி தொடரின் பிரோமோ மக்களை வெகுவாக ஈர்த்து வருகிறது.

சன் டிவியில் ராடன் நிறுவனத்தின் தயாரிப்புகளான சித்தி தொடர் முதல் வாணி ராணி வரை அனைத்து தொடர்களும் மூன்று ஆண்டுகள் குறையமல் ஓடியுள்ளது. ராதிகா சரத்குமாரின் நடிப்பு இல்லத்தரசிகளை ஈர்த்தது.

வாணி ராணி தொடர் முடிந்ததை அடுத்து, அடுத்தது என்ன என்ற எதிர்பார்ப்பு நிலவிக் கொண்டிருந்தது. இந்நிலையில், ராடன் நிறுவனம் சார்பாக தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வரும் நடிகை ராதிகா சரத்குமாரின் புதிய நெடுந்தொடர் விரைவில் ஆரம்பமாகிறது.

சரித்திரக் கதையின் பின்னணியுடன் உருவாகி வரும் தொடர் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாகியுள்ளது. இந்த தொடரை இரண்டு இயக்குனர்கள் இயக்கி வருகின்றனர். சரித்திரக் கால காட்சிகளை பிரபல இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவும், நிகழ்காலக் காட்சிகளை சி.ஜே.பாஸ்கரும் இயக்கி வருகின்றனர்.

மொத்தம் 7 வேடங்களில் ராதிகா சரத்குமார் நடித்து வருவதாகவும், நிகழ்காலக் கதையில் 3 வேடங்களிலும், சரித்திரக் கதையில் 4 வேடங்களில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த தொடரில், ராதிகா சரத்குமாரை தவிர தாமிரபரணி படத்தில் கதாநாயகியாக நடித்த பானு, நிரோஷா, உமா ரியாஸ் கான் உள்ளட்டோர் நடிக்கின்றனர். சிற்பி இசையமைத்துள்ளார். இந்த தொடர், தமிழில் மட்டும் அல்லாமல் தெலுங்கு, மலையாளம் மொழிகளிலும் ஒளிபரப்பப்படுகிறது.
சந்திரகுமாரியின் புரோமோ பார்க்கும்போதே பார்வையாளர்களையிடையே ஒருவித எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
/body>