கோர்ட்டில் ஆஜராகாமல் ஷூட்டிங் சென்ற அமலா பால் - நீதிமன்றம் அதிரடி உத்தரவு

வருகின்ற ஜனவரி 15ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Jan 10, 2018, 15:15 PM IST

வருகின்ற ஜனவரி 15ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழ், மலையாளம் படங்களில் முன்னணி நடிகையாக திகழ்பவர் நடிகை அமலா பால். சமீபத்தில் அவரின் மீது வாகன வரி ஏய்ப்பு மோசடி என வழக்கு தொடர்ப்பட்டது.

சொகுசு காரினை புதுச்சேரியில் வாகனப் பதிவு செய்ததாகவும், அதன் வாயிலாக பல லட்ச ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் போலிஸ் முன் ஆஜராகி விளக்கம் அளிக்க கேரள நீதிமன்ற சம்மன் பல முறை அனுப்பப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 19ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிமன்ற சம்மன் ஆணை பிறப்பித்திருந்தது.

அன்றைய தினம் ஆஜராகாததால், ஜனவரி 5ஆம் தேதி ஆஜராக உத்தரவிட்டது. ஆனால், அவர் ஆஜராகாமல் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். இதனையடுத்து, வருகின்ற ஜனவரி 15ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனால் கைதாகும் நிலையில் இருப்பதால் அவர் முன் ஜாமின் கேட்டு மனுதாக்கல் செய்திருந்தார். இதை நேற்று விசாரித்த நீதிமன்றம் இவ்வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.

You'r reading கோர்ட்டில் ஆஜராகாமல் ஷூட்டிங் சென்ற அமலா பால் - நீதிமன்றம் அதிரடி உத்தரவு Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை