96 படத்தில் நடித்த கெளரி கிஷனுக்கு மலையாள படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
96 படத்தில் திரிஷாவின் சிறிய வயது தோற்றத்தில் நடித்த கெளரி கிஷன் தன் நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருப்பார். தனது நடிப்பாலும் அழகாலும் தமிழ் ரசிகர்களை கொள்ளைக் கொண்ட ஜானு தற்போது மலையாள சினிமாவில் நடிக்கவுள்ளார்.
பிரின்ஸ் ஜாய் இயக்கும் ’அனுகிரகீதன் ஆண்டனி’ என்னும் படத்தில் சன்னி வெயினுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். இதை பற்றி இவரிடம் கேட்ட போது, இந்த கதையை தான் நன்கு கேட்டு பிறகு ஒப்புக்கொண்டதாகவும், 96 கதைப் போல் தன் வாழ்வில் இந்த கதையும் ஒன்றி இருக்க வேண்டும் என்றும் கூறுகிறார்.
96 படத்தின் சிறுவயது கதாப்பாத்திரம் அனைவரையும் கவர்ந்தது. அதுபோல் இந்த படமும் அமைய வேண்டும் என்று கூறியுள்ளார்.