தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் சார்பில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு பெரியார் விருது வழங்கப்பட உள்ளது.
தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் சார்பில் இயல், இசை, நாடகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டுதோறும் பெரியார் விருது வழங்கப்படுகிறது.
அந்த வகையில், இந்த ஆண்டிற்கான பெரியார் விருதுகள் பட்டியல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, அறம் பட இயக்குனர் கோபி நயினார் உள்ளிட்ட 11 பேருக்கு பெரியார் விருதுகள் வழங்கப்பட உள்ளது. சென்னை பெரியார் திடலில், வரும் 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள திராவிடர் திருநாள் விழாவில் இந்த விருதுகள் வழங்கப்பட உள்ளது.
இந்த விருதுகளை, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வழங்கி கவுரவிக்கிறார். மேலும், விஜய் சேதுபதிக்கு பெரியார் விருது கிடைத்திருப்பதை எண்ணி அவரது ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.