சமூக வலைதளங்களில் விலங்குகள் பாதுகாப்பு குறித்த பிரசாரத்தை மேற்கொண்ட சன்னி லியோனுக்கு பீட்டா விருது கொடுத்து கெளரவப்படுத்தியுள்ளது.
விலங்குகளை பாதுகாக்கவும் அதன் இனம் அழிவதில் இருந்து தடுக்கவும் பீட்டா அமைப்பு உருவாக்கப்பட்டது. ஆண்டு தோறும் விலங்குகளின் நலனில் அக்கறை உள்ளவர்களை தூதுவர்களாக நியமித்தும் விருதுகள் வழங்கியும் பீட்டா சிறப்பான பங்காற்றி வருகிறது.
இந்த அமைப்பில் விலங்குகள் மேல் மிகுந்த ஆர்வமுடைய நடிகர்கள், நடிகைகள் மற்றும் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு அங்கம் வகித்து வருகின்றனர்.
சன்னிலியோன் இதில் இணைந்தது மட்டுமன்றி பல முறைகள் இதற்காக குரல் கொடுத்து வருகிறார். இந்நிலையில் பீட்டா அமைப்பின் 2018ல் சிறப்பாக செயல்ப்பட்டவர்களுக்கான விருது வழங்கப்பட்டது. அதில் சன்னிலியோனுக்கு டிஜிட்டல் ஆக்டிவிசம் விருது வழங்கப்பட்டது.
மேலும் சன்னிலியோன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், என்னை அங்கீகரித்த பீட்டா அமைப்புக்கு நன்றி என்றும் விலங்குகளுக்கு எதிராக இருப்பவர்களிடம் எனது போராட்டம் தொடரும் என்றும் கூறியுள்ளார். மக்கள் விலங்குகளிடம் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வை தொடர்ந்து எற்படுத்தப் போவதாகவும் கூறியுள்ளார்.