விவேக் காமெடியை பாடலாய் மாற்றிய ஹிப்ஹாப் தமிழா!

NatpeThunai first song release

Dec 14, 2018, 21:02 PM IST

ஹிப்ஹாப் ஆதியின் நட்பே துணை படத்தின் முதல் பாடலான கேரளப் பாடல் ரீலிசாகி தெறிக்கவிட்டு வருகிறது.

சுந்தர்.சி தயாரிப்பில் வெளியாகும் படம் நட்பே துணை. இந்த படத்தின் வேலைகள் முடிவடையும் நிலையில் உள்ளது. மிசையமுறுக்கு படத்தை போல இந்த படத்திலும் பல யூடியூபர்கள் நடித்துள்ளார்கள்.

குறிப்பாக யூடியூப் சேனலில் பிரபலமாக இருக்கும் எறும சாணி விஜய் இந்த படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் முதல் பாடல் இன்று 11 மணிக்கு வெளியானது. ஹிப்ஹாப் ஆதியின் பாடல் என்றாலே மக்கள் ரசிக்கும் வகையில் தான் இருக்கும். அதுபோல இந்த படத்திலும் உள்ள கேரளப் பாடல் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.

2000 ஆவது ஆண்டில் பிரபு, ரம்யாகிருஷ்ணன் நடிப்பில் வெளியான பட்ஜெட் பத்மநாபன் படத்தில் வரும் விவேக்கின் மலையாள காமெடியில் என்ட மதர் டங்க் மலையாளம், என்ட ஸ்டேட் கேரளா, என்ட சீஃப் மினிஸ்டர் இ.கே. நாயனார் என விவேக் கூறுவார்.

அதுபோல இந்த பாடலில் எங்க ஸ்டேட்டு கேரள ஆனோ, எங்க சிஎம் விஜயன் ஆனோ என ஹிப்ஹாப் பாடியுள்ளார்.

இந்த பாடலை பார்த்த பிறகு படத்தின் எதிர்ப்பார்ப்பு அதிகரிக்கிறது. மிசையமுறுக்கு வெற்றியை தொடர்ந்து நட்பே துணை படமும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

You'r reading விவேக் காமெடியை பாடலாய் மாற்றிய ஹிப்ஹாப் தமிழா! Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை